உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் வீட்டில் கேட்ட பலத்த வெடிச்சத்தம்: 8 வயது சிறுவன் பலி, நேரில் சென்ற சித்தராமையா

பெங்களூருவில் வீட்டில் கேட்ட பலத்த வெடிச்சத்தம்: 8 வயது சிறுவன் பலி, நேரில் சென்ற சித்தராமையா

பெங்களூரு; பெங்களூரு அருகே கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 8 வயது சிறுவள் ஒருவன் பலியானான். 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ பகுதிக்கு முதல்வர் சித்தராமையா நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு;வில்சன் கார்டன் பகுதியில் சின்னயன்பாளையத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று திடீரென குண்டுவெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதில் முபாரக் (8) என்ற சிறுவன் பலியானான். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.வீட்டின் முதல் தளம், கூரை மற்றும் சுவர்கள் முற்றிலும் இடிந்து சாம்பலாயின. சுற்றியுள்ள சில வீடுகளுக்கு தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். பலியானவரின் சடலத்தை மீட்ட அவர்கள், காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு முதல்வர் சித்தராமையா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது; இது ஒரு கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கட்டட வளாகத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முபாரக் என்ற 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கான உரிய சிகிக்சை செலவை அரசு ஏற்கும். சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. தொடக்க விசாரணையில் இது சிலிண்டர் வெடிப்பு போல் தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2025 20:08

கோயமுத்துரில் ஒருத்தர் சிலிண்டர் என்று கூறினார் நினைவில் வைத்திருந்தா நீங்க சங்கீ , ஆனா திருந்தாம மக்களை கொலை செய்தா நீங்க ...?


N Sasikumar Yadhav
ஆக 15, 2025 18:24

உடனடியாக என்ஐஎ விசாரிக்க உத்தரவிட வேண்டும்


Veera
ஆக 15, 2025 17:35

Cylinder accident?


முக்கிய வீடியோ