உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 பேர் உயிரை பலிவாங்கிய சம்பவம்: கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ்

11 பேர் உயிரை பலிவாங்கிய சம்பவம்: கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ்

பெங்களூரு; கர்நாடகாவில் நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார். முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை பெங்களூரு வென்றதை தொடர்ந்து சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய, போலீஸ் கமிஷனர் தயானந்தா உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெங்களூரு அணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இந் நிலையில், அதிரடி நடவடிக்கையாக அம்மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., தலைவர் ஹேமந்த் நிம்பல்கர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய பொறுப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதே போன்று முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் நீக்கப்பட்டுள்ளார். மாநில ஒலிம்பிக் சங்க தலைவராகவும் இருக்கும் அவர், வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு அதிக அழுத்தம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Selvaraj
ஜூன் 07, 2025 12:59

சிலர் கைது, ஒன் மேன் விசாரணை கமிஷன் எல்லாம் சும்மா கண்துடைப்பு. விசாரணை கமிஷன் கூறும் நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துவிட முடியும். முதலமைச்சர் துணை முதல்வர் ஆகியோர் மீது யார் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்..?


KRISHNAN R
ஜூன் 06, 2025 22:13

இது ஒரு சிறந்த படிப்பினை. அரசியல் பிழைதோர் க்கு அறம் கூற்றாகும்


GMM
ஜூன் 06, 2025 21:37

மக்கள் அதிகம் கூடும் சந்தை , மைதானம், பஸ் நிலையம், அனைத்து மத விழாக்கள், வழிபாடு இடங்களில் ஒருவர் தன்னை அடையாள படுத்த ஆதார் எண் போன்ற நிரந்தர அடையாளம் கேமிராவில் பதியும் வண்ணம் சட்டை முன் புறம் கட்டாயம் நிகழ்ச்சி முடியும் வரை மாட்ட வேண்டும். இதில் தேச விரோதமான நபர் பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூன் 06, 2025 21:28

பலியாடு. 11 பேர் இறந்தபிறகும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திய அரசாங்கமும், பிசிசிஐ, RCB நிர்வாகம், வீரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 06, 2025 21:27

பலர் பலிக்கடாவாகி உள்ளனர். உண்மையான குற்றவாளி யார்? உண்மை தெரியவருமா அல்லது புதைக்கப்படுமா?


Anantharaman Srinivasan
ஜூன் 06, 2025 21:25

மந்திரிகள் யாரும் பொறுப்பேற்று பதவி விலக மாட்டார்கள். மந்திரி பதவி உடும்பு பிடி.


C G MAGESH
ஜூன் 06, 2025 17:26

பலியாடு தயார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை