உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்கா விமானத்தால் பஞ்சாப்பிற்கு அவப்பெயர்: பக்வந்த் மன் கோபம்

அமெரிக்கா விமானத்தால் பஞ்சாப்பிற்கு அவப்பெயர்: பக்வந்த் மன் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ள அம்மாநில முதல்வர் பக்வந்த் மன், மாநிலத்தை அவமானப்படுத்த முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த இந்தியர்களில் 104 பேர் முதற்கட்டமாக அந்நாடு இந்தியாவுக்கு நாடு கடத்தியது. கடந்த 5ம் தேதி அவர்கள் வந்த விமானம் பஞ்சாபின் அமர்தசரசில் தரையிறங்கியது. 2வது விமானமும் பஞ்சாபில் நாளை தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களுடன் வரும் விமானம் நாளை அமிர்தசரசில் தரையிறங்குகிறது. இந்த விமானத்தை அமிர்தசரசில் தரையிறக்குவதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் கூற வேண்டும். பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சந்திக்கும்போது, இந்தியர்கள் கையில் விலங்கை அந்நாட்டு அதிகாரிகள் போட்டிருக்க வேண்டுமா?இதுதான் டிரம்ப் தரும் பரிசா?கடந்த 5ம் தேதி வந்த முதல் விமானத்தில் வந்தவர்கள் பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அந்த விமானத்தை ஆமதாபாத்திற்கு அனுப்பி வைக்காமல், அமிர்தசரசில் தரையிறக்கியது ஏன்?பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அமிர்தசரஸ் நகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

subramanian
பிப் 15, 2025 21:42

பஞ்சாப் முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


V.Mohan
பிப் 15, 2025 19:27

திருட்டு விடியல்கள் என்னமோ அவுங்க இத்தாலி மாமியா ஆட்சியில் எல்லா ஆணியையும் தப்பில்லாம கரெக்டா புடுங்குன மாதிரி பேத்துறது அசிங்கமாக உள்ளது. வடை கெட்டுப் போன பின்னாடியும், அதுல உள்ள ஓட்டையையும் அத வச்சிருந்த தட்டையும குத்தம் சொல்ற சோம்பேறிங்க


அப்பாவி
பிப் 15, 2025 17:11

போன தடவை அமிர்தசரஸ். அடுத்தடுத்த தடவை டில்லி, அப்புறம் சென்னை மும்பை கல்கத்தான்னு பிரிச்சி இறக்கலாம். pan India மூவ்மெண்ட்.


பேசும் தமிழன்
பிப் 15, 2025 15:34

அமெரிக்க விமானத்தால் பஞ்சாப் மாநிலத்துக்கு அவப்பெயர் அல்ல..... திருட்டுத்தனமாக அமெரிக்கா சென்ற ஆட்களால் தான் இந்தியா நாட்டுக்கு அவமானம்.... உன் வீட்டில் திருட்டுத்தனமாக யாராவது வந்து உட்கார்ந்து கொண்டால்... நடக்குமா.... அந்த ஆளின் மீது நடவடிக்கை எடுக்காமல்.... விட்டு விடுவீர்களா ???


veeramani
பிப் 15, 2025 09:23

முதலில் மாண்புமிகு பஞ்சாபி முதல்வர் மாயன் அவர்களை பதவி நீக்கம் செய்யுங்கள். அமிர்தசரஸ் இந்தியாவில்தான் உள்ளது , அமெரிக்காவில் திருத்துத்தனமாக வசிக்கும் இந்தியர்களைத்தான் நாடுகடத்துகிறது. இந்தியாவில் எங்கு இறங்கினால் என்ன இந்த மாதிரி முட்டாள்களை எவன் முதல்வராக தேர்வு செய்தார்கள்


N.Purushothaman
பிப் 15, 2025 09:20

வெக்கம் மானம் அவமானம் பத்தி பேசறது எல்லாம் வெட்டி பேச்சாகவே கருதப்படும் ...


V.Mohan
பிப் 15, 2025 08:14

திராவிட விடியல் விசுவாசிகள் பல பொய் பெயர்களில் விடியல்களின் திருடர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல இவரும் சம்மன் இல்லாமல் ஆஜராகி வக்காலத்து வாங்குகிறார். இந்த மாதிரி திருப்பி அனுப்புவது 2000 வது ஆண்டு முதல் நடப்பதாக வெளியுறவு அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிக்கை தருகிறார். இப்போது ஏன் குஜராத்தி, பஞ்சாபி என்று சொல்லி அவமானம் என்கிறார்?. இந்தியர் என்றே தான் -""கட்டுமரம் டிரெயிண்ட்கூண்ஆத்மி"" அல்லாத பஞ்சாபிகள் சொல்வார்கள். நாட்டுக்கு இல்லாத அவமானம் உங்களுக்கு வந்துவிட்டதா? மேலும் அது ராணுவ விமானம். இந்திய ராணுவ கண்ட்ரோல் உள்ள இடங்களுக்குத்தான் வரும்.


பாமரன்
பிப் 15, 2025 09:43

அமிர்தசரஸ் விமான நிலையம் ஏர்போர்ட் அதாரிடி ஆஃப் இந்தியா நடத்துவது... அருகில் உள்ள அம்பாலா மற்றும் சண்டிகரில் ராணுவ விமான தளங்கள் உள்ளது... அவ்வளவு ஏன் நம்ம பூலோக சொர்க்கம் குசராத்துல ராணுவ விமான தளங்கள் பல உள்ளன... ஆக்சுவலா அமிரிக்கால இருந்து வர்றப்ப முதலில் வருவது குசராத்து விமான தளங்கள் தான்...எரிபொருளும் மிச்சமாகும்... எப்பவுமே காலியா கெடக்கும்..


Kasimani Baskaran
பிப் 15, 2025 07:35

வந்ததில் பல காலிஸ்தானிகள் மற்றும் தீவிரவாதிகள் பலர் இருந்தார்களாம்... எளிதாக தூக்க அதுதானே சரியான இடம்...


NACHI
பிப் 15, 2025 03:34

உங்க. மாநில ஆளுங்தானே அதிகம் மான் மன்னா ...


Senthoora
பிப் 15, 2025 05:41

ஆனால் விசா இல்லாமல் களவாக இருந்தது , குஜராத்திகள்


தாமரை மலர்கிறது
பிப் 14, 2025 23:47

ஊழல் ஆம் ஆத்மீ கட்சி பஞ்சாபை ஆட்சி செய்கிறது என்ற களங்கத்தை விடவா இது பெரிசு? கள்ளக்குடியேறிகள் பஞ்சாபிகள் தான் உலகுக்கே தெரியும். அதனால் அமித்சரசில் இறக்குவது தான் சரி. அதோடு, வரும் குடியேறிகளை மொட்டை போட்டு தாடியை மழித்து பின்பக்கத்தில் நாலு அடிபட்டு வரிக்குதிரையாக மாற்றி அனுப்புங்கள் என்று இந்தியா கோரிக்கை வைக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த விமானத்திலேயே கள்ளத்தனமாக குடியேற பஞ்சாபிகள் அமெரிக்காவிற்கு பிளையிட் ஏறுவார்கள்.


முக்கிய வீடியோ