உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹைதராபாதுக்கு பதில் பாக்ய நகர் ஆர்.எஸ்.எஸ்., அழைப்பில் சர்ச்சை

ஹைதராபாதுக்கு பதில் பாக்ய நகர் ஆர்.எஸ்.எஸ்., அழைப்பில் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத், தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இதன் தலைநகராக உள்ள ஹைதராபாதின் பெயரை பாக்ய நகர் என மாற்ற, சில ஆண்டுகளாக பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும், 'ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயர் பாக்ய நகர் என மாற்றப்படும்' என, பா.ஜ., வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கலாசார பிரிவான, 'பிரஜ்னா ப்ரவா' சார்பில், ஹைதராபாதில், 'லோக்மந்தன்' என்ற பெயரில், நான்கு நாட்கள் கருத்தரங்கு நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக ஆர்.எஸ்.எஸ்., வெளியிட்ட விளம்பரம், துண்டு பிரசுரங்கள் என அனைத்திலும், ஹைதராபாத் என்பதற்கு பதில், 'பாக்ய நகர் மஹா நகர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. லோக்மந்தன் என்பது, நாட்டில் உள்ள கலைஞர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர், சமூக மற்றும் கலாசார சவால்கள் பற்றி விவாதிக்கும் கருத்தரங்கு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் முன்னிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு துவங்கி வைக்க உள்ளார். இதில் பங்கேற்க, முதல்வர் ரேவந்த் ரெட்டி முதலில் விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், வேலைப்பளு காரணமாக அவருக்கு பதில் மாநில அமைச்சர் பங்கேற்க உள்ளார். லோக்மந்தன் நிகழ்ச்சி குறித்து, பிரஜ்னா ப்ரவா பிரிவு தலைவர் நந்தகுமார் கூறுகையில், ''எங்களை பொறுத்தவரை, ஹைதராபாத் நகரம் பாக்ய நகர் மஹா நகர் என்ற பெயரிலேயே இருக்கிறது. எதிர் காலத்திலும் அப்படியே இருக்கும்.''இதை முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. பாக்ய நகர் என்ற பெயர், பழங்கால பாக்ய லட்சுமி கோவிலில் இருந்து வந்தது. இது அந்த இடத்தின் பாரதப் பெயர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Tetra
நவ 21, 2024 12:32

செஞ்சுட்டா போச்சு.


அப்பாவி
நவ 21, 2024 10:33

,சீக்கிரம் டில்லிக்கு அஸ்தினாபுரம்நு பேரை மாத்துங்க.


Oviya Vijay
நவ 21, 2024 10:15

சர்ச்சை செய்வதற்கென்றே உள்ள ஒரு அமைப்பு எனில் அது ஆர் எஸ் எஸ் தான்... ஒரு கட்சி எனில் அது பிஜேபி தான்... இதில் சந்தேகமே வேண்டியது இல்லை...


hari
நவ 21, 2024 13:55

திராவிட முட்டுகளை விடவா??


AMLA ASOKAN
நவ 21, 2024 09:59

அரபு நாடுகளில் லட்சக்கணக்கான இந்துக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பணிபுரிந்தாலும் அங்கு மத வேற்றுமை என்பது துளியளவும் இல்லை . ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாழ்ந்து , ஒன்றிணைந்து போராடி, சுதந்திரம் பெற்ற இந்தியாவில் , முஸ்லிம்களை எதிரிகளாக கருதி , அவர்கள் மீது வெறுப்பை வளர்த்த வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்க சிலர் விரும்புகின்றனர் . பெயரை மாற்றினாலும் சரித்திரத்தை மாற்ற முடியாது . அன்றைய முஸ்லீம் மன்னர்களை கொடூரமானவர்களாக காட்சிப்படுத்தினாலும் , இன்றைய முஸ்லிம்கள் இந்துக்களை உளமார நேசிக்கும் , மத நல்லிணக்கத்தை தான் விரும்புகிறார்கள் .


Anonymous
நவ 21, 2024 10:28

என்னது , முஸ்லிம் மன்னர்களை கொடூரமானவர்களா காட்டுறாங்களா? கொடூரமாக மேல்கோட்டை மக்களை கொண்ணு குவிச்ச திப்பு சுல்தானுக்கு , இங்கே திப்பு ஜெயந்தி கொண்டாடுறாங்க, சும்மா அடிச்சு விடாதீங்க, கொஞ்சமாவது மனசாட்சியுடன் எழுதுங்க.


AMLA ASOKAN
நவ 21, 2024 11:58

முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் GDP 26 % ஆக இருந்தது . அதற்கு காரணம் மக்களிடேயே இருந்த மத ஒற்றுமையால் மிக்க மகிழ்ச்சியுடன் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவின் உற்பத்தியை உலகில் 28 % ஆக உயர்த்தி காட்டினார்கள் . ECONOMY OF INDIA IN MUGAL PERIOD என்ற தலைப்பில் GOOGUL உள் சென்று பார்த்தல் உண்மை விளங்கும் .


AMLA ASOKAN
நவ 21, 2024 12:21

முகலாய மன்னர் பாபருக்குப்பின் அவர் வழிதோன்றல்கள் அனைவரும் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியா குடிமகனாக வாழ்ந்து , இங்கிருந்து எந்த செல்வத்தையும் பிரிட்டிஸ்காரனை போல் திருடி செல்லாமல் , நாட்டை வளமாக்கி , இங்கேயே இறந்தும் போனார்கள் . என்ன தான் முஸ்லீம் மன்னர்கள் இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள் என்று கதை விட்டாலும் , அவர்கள் ஆட்சி காலத்தில் 90 % மக்கள் இந்துக்களாக தான் வாழ்ந்தார்கள் . அன்றைய ஹிந்துக்களில் சிலர் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்கள் என்பது உண்மை . அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு என்றார்கள். அன்றைய இந்து முப்பாட்டனின் வழிவந்தவர்கள் தான் இன்றைய இந்தியாவின் 18 % முஸ்லிம்கள் . இவர்கள் அந்நிய நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறிய வந்தேறிகள் அல்ல .


Barakat Ali
நவ 21, 2024 09:42

இந்தக் காமெடியெல்லாம் எதுக்கு ???? துணிவிருந்தால் பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்களேன் .........


sankar
நவ 21, 2024 10:17

வருது தம்பி - ஓடிறாதீங்க


pmsamy
நவ 21, 2024 09:26

ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்


Amsi Ramesh
நவ 21, 2024 10:03

சூராதி சூரர்களாலேயே முடியலை


Ramesh
நவ 21, 2024 07:17

அது என்ன சர்ச்சை? அப்படி சர்ச்சை பண்ணியவர் யார்? நினைச்சபடி கருணாநிதி பெயர் வைக்கலாம், அண்ணா பெயர் வைக்கலாம், கண்ட கழுதைங்க பேரெல்லாம் வைக்கலாம் ஆனால் முந்தைய பெயரை வைத்தால் சர்ச்சை. நல்லா விளங்குவீங்கடா


Anonymous
நவ 21, 2024 10:23

ரொம்ப சரியாக சொன்னீர்கள்


Amruta Putran
நவ 21, 2024 05:29

Before Hyderabad, what was the name of the place? Bhagya Nagar


புதிய வீடியோ