உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு நிகழ்ச்சிகளில் பாரத மாதா படத்தை அனுமதிக்க முடியாது: கேரளா திட்டவட்டம்

அரசு நிகழ்ச்சிகளில் பாரத மாதா படத்தை அனுமதிக்க முடியாது: கேரளா திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில், கவர்னர் மாளிகையில் நடந்த சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில், பாரத மாதாவின் உருவப்படம் இடம்பெற்ற நிலையில், 'அரசு நிகழ்வுகளில் அந்த படத்தை அனுமதிக்க முடியாது' என, கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், நேற்று முன்தினம் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்கும்படி, கேரள வேளாண் அமைச்சர் பி.பிரசாத், கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. நிகழ்ச்சி நிரலில், பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமரசம் இல்லை

இதனால் அதிருப்தி அடைந்த கேரள அமைச்சர்கள் பி.பிரசாத், வி.சிவன்குட்டி, நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். பாரத மாதா விவகாரத்தில் சமரசத்துக்கு இடமே இல்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, திட்டமிட்டபடி, கவர்னர் ராஜேந்திர அர்லேகர் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கேரள வேளாண் அமைச்சர் பி.பிரசாத் நேற்று கூறியதாவது:சுற்றுச்சூழல் தின விழா தொடர்பாக, எங்களுக்கு முதலில் அனுப்பப்பட்ட அழைப்பிதழில், பாரத மாதா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிறிது நேரத்துக்குப் பின், திருத்தப்பட்ட அழைப்பிதழ் வந்தது. அதில்தான், பாரத மாதா உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மரியாதை செலுத்த முடியாது என, தெரிவித்தேன். நிகழ்ச்சி நிரலில் இருந்து அதை நீக்கும்படி வலியுறுத்தினேன். ஆனால், அதை கவர்னர் மாளிகை ஏற்கவில்லை.

எப்படி பயன்படுத்தலாம்?

அரசியலமைப்பு சட்டத்தாலோ அல்லது ஆட்சியில் உள்ள எந்த அரசாலோ, பாரத மாதா உருவப்படம் அதிகாரப்பூர்வமாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், அரசு நிகழ்ச்சியில் அதை எப்படி பயன்படுத்தலாம்?பாரத மாதா கையில் வைத்திருக்கும் கொடி நம் தேசியக்கொடி அல்ல. அது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கொடி. கவர்னரும், அந்த அமைப்பும், தனிப்பட்ட நிகழ்ச்சியில் அதை பயன்படுத்தலாம். ஆனால், அரசு நிகழ்ச்சியில் அனுமதிக்க முடியாது.நாட்டின் ஜனாதிபதிகள், கேரளாவின் முந்தைய கவர்னர்கள் யாரும் பாரத மாதாவின் படத்தை அரசு நிகழ்ச்சியில் பயன்படுத்தாத நிலையில், கவர்னர் ராஜேந்திர அர்லேகர் மட்டும் பயன்படுத்தியது ஏன்? கவர்னர் என்பவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளை அரசியல் நிகழ்ச்சிகளாக மாற்ற கவர்னர் முயற்சிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

நல்லவன்
ஜூன் 08, 2025 00:16

ஷாஹித் அப்ரிடி போடோ வைக்கலாம்


venugopal s
ஜூன் 07, 2025 13:07

சந்து பொந்து என்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் காவி பெயிண்ட் அடிக்க ஆளுநரே முயல்வது அரசியல் தவிர வேறு ஒன்றும் இல்லை!


Velan Iyengaar, Sydney
ஜூன் 07, 2025 21:55

ஈர வெங்காயம், கட்டு மரம் இதை விட காவி பெயிண்ட் எவ்ளோ மேல் வெட்டி கோப்பால் ...


Velayutham rajeswaran
ஜூன் 07, 2025 10:13

இவனுகளும் இவனுகளோட கொள்கையும் உண்டியல் குலுக்கி கூட்டம்


நாஞ்சில் நாடோடி
ஜூன் 07, 2025 10:06

கேரள கம்யூனிஸ்ட்களும் திராவிட 21 ம் பக்க மரபு வழியினரும் ஒன்றுதான்...


Iyer
ஜூன் 07, 2025 10:03

தங்க கடத்தல் செய்பவர்கள் மந்திரிகள் ஆனால் நாட்டின் கதி அதோகதி தான். கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் ராஷ்ட்ரபதி சாசனம் பிறப்பித்து - இரண்டு மாநிலங்களிலும் உள்ள சட்டவிரோத பங்களாதேஷிகள் ரொஹிங்கியாக்களை விரட்டி அடித்துவிட்டு பிறகுதான் தேர்தல் நடத்தணும். கேரளா ஒரு MINI PAKISTAN ஆகிவிட்டது. மேற்குவங்கம் BANGLADESH ஆகிவிட்டது.


Thirumal Kumaresan
ஜூன் 07, 2025 09:39

பைத்தியக்காரர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் கோமாளித்தனம் நடக்கத்தான் செய்யும் கேரளா மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.


Raj Kamal
ஜூன் 08, 2025 19:26

மூன்றாம் முறையாக அந்த ஆட்சிதான் தொடரப்போகிறது. நீங்கள் கமெண்ட்டையும் தொடரத்தான் போகிறீர்கள்.


RATNAM SRINIVASAN
ஜூன் 07, 2025 09:38

பாரத மாதாவுக்கு மரியாதை செலுத்தமாட்டேன் என்று சொன்னவர் ஒரு ஹிந்துவே


Amsi Ramesh
ஜூன் 07, 2025 10:33

கம்மி உண்டியல் என்பதே சரி


Ganapathy
ஜூன் 07, 2025 11:09

வீடியோ ஆதாரம் இருக்கா?


sankaranarayanan
ஜூன் 07, 2025 09:20

பாரத மாதாவின் படம் வைத்ததால் அது அரசியை ஆகிவிட முடியாது இருப்பது பாரதம் புழைப்பது பாரதம் வேண்டாமென்றால் அந்நிய நாட்டிற்கு செல்லலாமே அங்கே சுத்தில் அரிவாள் சின்னம் கொடி காட்டி பொழைக்கலாமே


புரொடஸ்டர்
ஜூன் 07, 2025 09:15

கேரளா இந்தியாவில் இல்லையாடா? "பாரதமாதா" இந்தியாவின் நிரந்தர அடையாளம்டா.


Kasimani Baskaran
ஜூன் 07, 2025 08:04

பாரதம் என்பது கூட மத சார்புள்ளது என்று அதையும் பாஸ்போர்ட்டில் இருந்து நீக்கவேண்டும் என்று கூட உருட்டுமளவுக்கு புத்திகெட்டுப்போன இதுகளை சீனாவுக்குத்தான் அனுப்ப வேண்டும்.


சமீபத்திய செய்தி