உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மாற்றாக ஜன., 1ல் பாரத் டாக்சி செயலி அறிமுகம்

ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மாற்றாக ஜன., 1ல் பாரத் டாக்சி செயலி அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தனியார் ஆன்லைன் டாக்சி முன்பதிவு நிறுவனங்களான, 'ஓலா, ஊபர், ராபிடோ' ஆகியவை டிரைவர்களிடம் அதிக கமிஷன் வசூலிப்பதால், அவற்றுக்கு மாற்றாக டாக்சி டிரைவர்கள் அடங்கிய கூட்டுறவு நிறுவனம், 'பாரத் டாக்சி' எனும் செயலியை வரும் ஜனவரி 1ல் டில்லியில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆட்டோ, கார், பைக் வாயிலான பொது போக்குவரத்து சேவையை ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியை, நாட்டின் பல்வேறு நகரங்களில், 'ஓலா, ஊபர், ராபிடோ' ஆகிய தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. லட்சக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பதிவு செய்துள்ள டிரைவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக கமிஷன் பிடித்தம் செய்வதாக புகார் உள்ளது. டிரைவர்கள் பயணியரிடம் கூடுதல் கட்டணம் கேட்பதும், தகராறு ஏற்படுவதும் நடக்கிறது. எனவே, 'சஹாகர் டாக்சி' என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனத்தை ஆட்டோ, கார் டிரைவர்கள் துவங்கினர். இதில் ஆயிரக்கணக்கான டிரைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு நிறுவனம் சார்பில், 'பாரத் டாக்சி' என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இதை டில்லியில் ஜனவரி 1ல் அறிமுகப்படுத்த உள்ளனர். டிரைவர்களே நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் இருப்பதால் பூஜ்ய கமிஷன் முறையில் செயலியை வடிவமைத்துள்ளனர். தனியார் வாகன முன்பதிவு செயலிகளில் இருப்பதை போலவே மற்ற வசதிகள் அனைத்தும் இதிலும் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிப்படையான கட்டண அமைப்பு, வாகனத்தை கண்காணிக்கும் வசதி, 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை, டில்லி காவல் துறையுடன் இணைப்பு உள்ளிட்டவை இந்த செயலியில் உள்ளதாக கூட்டுறவு நிறுவனம் தெரிவித்தது. டில்லியை தொடர்ந்து குஜராத்தின் ராஜ்கோட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ல் அறிமுகமாகிறது. இதை மேலும் 20 நகரங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ram
டிச 18, 2025 10:37

அதிக கட்டணம் கேட்டல் பரவாயில்லை பயனிரிடம் அடாவடி செய்கிறார்கள், அதுவும் இப்போது மத ரீதியில் பாகுபாடு செய்கிறார்கள்.


Nkk Baburaj
டிச 18, 2025 09:43

ரேபைட்டோ வில் புக் செய்து தொடர்பு கிடைத்தவுடன் டிரைவர்கள் அதை கான்செல் செய்ய சொல்லி கூகுளை மேப் வாங்கிக்கொண்டு டெலிவரி செய்கிறார்கள்


Anantharaman
டிச 18, 2025 08:24

ஒலா ஊர் ராபிடோ இந்த நிறுவனங்கள் இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி டிரைவர்களுக்கு டிப்ஸ் 10, ,20, 50 சேர்ந்ததாக வற்புறுத்துகின்றன. இவற்றைத் தடை செய்வதே நலம். நம் பணம் நம் தாட்டிலேயே இருக்கும்.


LAYMAN
டிச 18, 2025 07:30

எது மாறினாலும் ஆட்டோ டாக்ஸி டிரைவர்களின் அடாவடி மட்டும் மாறாது


GMM
டிச 18, 2025 07:17

பாரத் டாக்சி கூட்டுறவு. நாட்டுயர்வு. நாடு முழுவதும் அமுல்படுத்த வேண்டும். வங்கி குறைந்த வட்டி கடன் போன்ற உதவிகள் தேவை. கட்சிகள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். சேவை நன்கு இருந்தால் மக்களே இஷ்டப்பட்டு கொடுங்கள். கூட்டுறவு சிறு பணிமனை, பெட்ரோல் பங்க் தொடங்க முயற்சி செய்யுங்கள். மொத்த டாக்சி விவரம் , ஓட்டுநர் அடையாளம் எப்போதும் ஆன்லைன் மூலம் வெளியிடுங்கள்.


visu
டிச 18, 2025 05:08

எந்த அமைப்பும் தொடர்ந்து இயங்க லாபம் அவசியம் அரசு அமைப்பா இருந்தால் கூட குறைந்த கமிஷன் பெற்று செயல்பாட்டால் தான் தொடர்ந்து இயங்கும் இல்லாவிட்டால் மக்கள் வரிப்பனம்தான் செலவாகும் அடுத்து இனிமேலாவது மீட்டருக்கு மேல கேட்காம இருப்பாங்களா அதை உறுதி படுத்த வேண்டும்


தமிழன் மணி
டிச 18, 2025 04:00

விரைவில் நாட்டின் எல்லா நகரங்களிலும் இந்த செயலி நடைமுறைக்கு வர வேண்டும் கோவையில் ரேபிடோ, ஊபர், ஓலா என எந்த செயலிகள் மூலம் ஆட்டோவை புக் செய்தாலும் எழவெடுத்த திருட்டு நாயிகள் செயலியில் காட்டும் தொகையிலிருந்து ₹30 முதல் ₹50 வரை கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று அடாவடித்தனம் செய்கிறானுகள் இதே 5 மாதத்திற்கு முன்பு நான் திருவனந்தபுரம் சென்றிருந்த போது அதே ரேபிடோ செயலியில் ஆட்டோ புக் செய்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினேன் ₹54 காட்டியது ஆட்டோ டிரைவர் அதிகமாக கேட்பார் என நினைத்தேன் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன் ₹54 என்றார் ஆச்சர்யத்தில் எனக்கு தலை சுற்றியது தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இதுதான் வித்தியாசம்


Anantharaman
டிச 18, 2025 08:27

நான் திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறேன். இங்கேயும் ஆட்டோ டிரைவர் கட்டணம் எவ்வளவோ அதை ஏற்பதில்லை. தமிழ்நாடு தான் திருட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு வழிகாட்டி.


முக்கிய வீடியோ