உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போபால் விஷ வாயு சம்பவம்: போபால் ஆலை கழிவுகள் அகற்றம்

போபால் விஷ வாயு சம்பவம்: போபால் ஆலை கழிவுகள் அகற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தார்: மத்திய பிரதேசத்தின் போபாலில், விஷ வாயு கசிந்த ஆலையில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு பின், 337 டன் நச்சுக்கழிவுகள் நிரம்பிய கொள்கலன்கள் அகற்றப்பட்டு, தார் மாவட்டத்தில் உள்ள கழிவு மேலாண்மை மையத்துக்கு எடுத்து வரப்பட்டு, இறக்கி வைக்கப்பட்டன. ம.பி., தலைநகர் போபாலில், 1984- டிச., 2- - 3 இடைப்பட்ட இரவில், யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையிலிருந்து, அதிக நச்சுத்தன்மை வாய்ந்த, 'மெத்தில் ஐசோசயனைட்' என்ற விஷ வாயு கசிந்ததில், 5,479 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் நீண்ட கால உடல்நலப் பிரச்னைக்கு ஆளாகினர். விபத்து நடந்து, 40 ஆண்டுக்குப் பின் நேற்று, போபால் பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து, 10க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள், 337 டன் நச்சுக்கழிவுகள் நிரம்பிய கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பிதாம்பூரில் உள்ள கழிவு மேலாண்மை மையத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன. இந்த நச்சுக்கழிவுகள், பாதுகாப்பான முறையில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை