உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை: பிரதமர் உறுதி

ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை: பிரதமர் உறுதி

ருத்ரபூர்: ‛‛ பா.ஜ.,வின் 3வது ஆட்சி காலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்''. என பிரதமர் மோடி கூறியுள்ளார்.உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ், நாட்டை பற்ற வைக்கும் வகையில் பேசி வருகிறது. அக்கட்சியை நீங்கள் தான் தண்டிக்க வேண்டும். இம்முறை அவர்களை களத்தில் இருக்க விடாதீர்கள். ஜனநாயகத்தின் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. குழப்பம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு நாட்டை தள்ள காங்கிரஸ் விரும்புகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5erpzcei&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டை இரண்டாக பிரிப்பது பற்றி கர்நாடக காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளார். நாட்டை பிரிக்க நினைக்கும் அக்கட்சி தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? ஆனால், காங்கிரஸ் அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் அளித்து உள்ளது.பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. ஊழல்வாதிகளை ஒரு போதும் விட மாட்டேன். 3வது ஆட்சிகாலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே பிறந்துள்ளேன். ஊழல்வாதிகள் சிறைக்கு செல்ல வேண்டாமா. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு என்னை விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

காங்கிரசே காரணம்

ராஜஸ்தானின் கோட்புட்லி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், நாட்டை விட தனது குடும்பத்தினரையே பெரிதாக நினைக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 60 ஆண்டுகளாக நாட்டில் நிலவிய வறுமைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். காங்கிரஸ் தலைவர்கள் வெற்றி பெறுவதை பற்றி பேசாமல், நாட்டிற்கு மிரட்டல் விடுத்து பேசுகின்றனர். நமது ஆயுதப்படைகள் தன்னிறைவு பெறுவதை காங்கிரஸ் விரும்பியது கிடையாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஏப் 02, 2024 21:20

அப்படியே அந்த தேர்தல் பத்திர ஊழல்வாதிகளையும் சிறையில் அடைக்க வேண்டும்!


தாமரை மலர்கிறது
ஏப் 02, 2024 19:56

ஜெயிலில் இருக்கும் ஊழல் முதல்வருக்கு தூக்கு தண்டனை கொடுத்தால், மற்ற முதல்வர்களுக்கு பயம் ஏற்பட்டு ஒழுங்காக ஆட்சி செய்வார்கள்


G.VINOTHKUMAR
ஏப் 02, 2024 17:28

ஆமாம் ஆமாம் டிடிவிதினகரனுடன் கூட்டணி வைக்கும் போதே தெரியுமே


கனோஜ் ஆங்ரே
ஏப் 02, 2024 17:23

////ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை//// ரெண்டு மாசம் கழிச்சு, இதையே சொல்லுவாங்க எதிர் ஆளுங்க அப்ப என்ன செய்வீங்க,


Palanisamy Sekar
ஏப் 02, 2024 16:28

அந்த பயம்தான் இங்கே தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய கவலையை கொடுத்துவருகின்றது நாம் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் போயிடுமே, நாமும் ஜெயில் கம்பியை எண்ணனுமே என்று தூக்கம் தொலைத்த கவலையில் இருக்கின்றார்கள் இங்கே உள்ள ஜனங்கள் ஏப்ரல் பதினான்காம் தேதியை நினைவில்வைத்துக்கொண்டு அதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் அண்ணாமலை அவர்கள் வெளியிடப்போகும் அந்த ஊழல் பட்டியலில் சிக்கி தவிப்போர் இப்போதைக்கு நிம்மதியாக இருக்கலாம் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பயந்துபோய் நாடுகடந்துகூட வாழ திட்டமிடுவார்கள்


கனோஜ் ஆங்ரே
ஏப் 02, 2024 17:28

////அண்ணாமலை அவர்கள் வெளியிடப்போகும் அந்த ஊழல் பட்டியலில் சிக்கி தவிப்போர் இப்போதைக்கு நிம்மதியாக இருக்கலாம்/// நாலு ஊழல் பட்டியல் வெளியிட்டாச்சு வேலைக்கு ஆகலை அப்புறம் இவரோட ஆளு ஆளுநர் கிட்ட பெரிய டிரங்க் பெட்டி அண்ணாமலை கோவைக்கு கல்லூரிக்கு அவங்க அப்பாரோட போனப்ப எடுத்துட்டு போன ட்ரங்க் பெட்டி மாதிரி முழுவதும் ஊழல் பட்டியல் கொடுத்து போட்டோ ஷூட் எடுத்தாச்சு ஒண்ணும் வேலைக்கு ஆகலை அந்த ஊழல் பட்டியலுக்கு அப்புறம் கிட்டதட்ட ஒரு பத்து பதினைஞ்சு ஆட்கள் மேலே ஊழல் பட்டியல் வெளியிட்டாரு


RAAJ
ஏப் 02, 2024 16:05

அது என்ன மூன்றாவது ஆட்சி காலம் நீங்கள் வராவிட்டால்? உங்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது ஊழல்வாதிகள் உங்களை மிரட்டுவதோடு விமர்சனமும் செய்கிறார்கள் என்று கூறுகிறீர்கள் நாட்டுக்கே தலைவனாக மொத்த அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொண்டு இப்படி பேசுவது உங்களின் கோழைத்தனத்தையும் இயலாமையையும் காட்டுகிறது. கடந்த பத்து வருடங்களாக எவ்வளவோ நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். தமிழ்நாட்டில் கழகங்கள் இரண்டும் பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர் என்பது உங்களுக்கு தெரியாத. அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் வெளியிட்டு என்ன பிரயோஜனம் என்ன நடவடிக்கை எடுத்தீங்க. நீங்க பேசுவதை பார்த்தால் கழகங்களுக்கு நீங்கள் பயப்படுவது போல் உள்ளது.


govinda rasu
ஏப் 02, 2024 15:25

ஜெய் ஸ்ரீராம்


Lion Drsekar
ஏப் 02, 2024 14:45

இத்தனை ஆண்டுகளாக எடுத்த நடவடிக்கையின் விளைவு ?? அன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அனைவருமே இன்றும் மக்கள் பிரநிதிகள், அன்று சிறைக்கு சென்றவர்கள் அனைவருமே இன்றும் அதே மக்கள் பிரநிதிகள் ? புத்தகம் வெளியிடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது என்று மக்கள் பிரநிதிகள் , மக்கள் வரிப்பணத்தில் வாழ்ந்தும் மக்களுக்காக பணியாற்ற தவறிய இதுபோன்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சட்டம் இயற்றியிருக்கலாமே ? மொத்தத்தில் எல்லாமே நாடகம்போல்தான் இறுக்கிறது பல லட்சம் கோடி ஊழல் என்ற செய்தி இன்று கைது செய்யப்படுவர் நாளை கைது என்று மக்கள் கூஉம் நிலையில் வயதில் மூத்த மக்கள் பணத்தில் வாழும் ஒரு அமைச்சர் மேடையில் பேசுவது " நாம் பார்த்த பொது பாவாடை போட்டுக்கொண்டு விளையாடிய குழந்தை இன்று ஆளுனராம் அதுவும் இரண்டு மாமிலத்துக்காம் , ஏதோ இராக்காவது ஒரு நாள் ஒரு கையெழுத்து போட்டுவிட்டு சம்பளம் வாங்கிக்கொன்று இருப்பதை விட்டு விட்டு எதற்க்காக எங்களுடன் வந்து இங்கு மோதுகிறது ?? மேலும் எங்களுடன் மோத முடியுமா ? நாங்கள் யார் ? மேலும் பாராளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்றால் ஆங்கிலம் தெரியவேண்டும் அல்லது ஹிந்தி தெரிந்திருக்கவேண்டும் இல்லை என்றால் அங்கு சென்று என்ன செய்யப்போகிறார்கள் ? என்று ஓரங்க நாடகம் நடத்தி பேசி பாராளுமன்றத்துக்கு இந்த தகுதி இல்லாதவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டால் அவர்கள் அங்கு சென்று குறைந்த விலையில் விற்கப்படும் டி குடித்து விட்டு, கிராமத்து மக்களுடன் டில்லியில் இருந்து கைபோனில் பேசிவிட்டு நான் நாளைக்கு நேரில் வருகிறேன் என்று கூறுவதை நடித்துக்காட்டி, நீங்கள் எல்லாம் என்ன செய்யப்போகிறீர்கள் அதற்க்கு ஒரு தகுதி இருக்கிறது மேலும் அப்படி எங்களுடன் மோதவேண்டும் என்றால் மாநில அளவில் தேர்தலில் போட்டியிட்டு வந்து எங்களுக்கு எதிரில் வந்து அமர்ந்து எதுவேண்டுமானாலும் பேசலாம், நாங்களும் அதற்க்கு சளைத்தவர்கள் அல்ல அதற்கிக்கு மேலும் பேசுவோம் என்று கூறி , பேசியது கண்டு மக்கள் என்ன நினைத்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? அதே போன்று ஒவ்வொரு தலைகளும் தங்களை ஒரு தேசிய தலைவனாகவும் ,நேர்மையின் சின்னமாகவும் காட்டிக்கொண்டு வரும் நிலைஒயில் எதை மக்கள் நம்புவார்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் பரவாகியில்லை, மாறாக பேசுகிறார்களே ? மற்றொரு குறுநில குடும்பம், சமீபத்தில் பிடிப்பட்ட போதைப்பொருள் எந்த மாநிலத்தின் கடலில் பிடிக்கப்பட்டது ? போதை பொருள் விற்பதை பிடிக்கவேண்டியது ஒன்றிய அரசு அவர்கள் கடமை தவறி விட்டார்கள், அவர்கள் எங்களிடத்தில் கூறியிருந்தால் நாங்கள் பிடித்து கூறியிருப்போமே ? தரமான உணவு வழங்காதது என் என்று ஊடகம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் கொடுப்பது மதிய அரசு அந்த அரிசியின் தரம் அப்படி இருக்ந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதில் ?? இப்படியே ஒருபுறம் இவைகளை எல்லாம் கொடுப்பது நாங்கள் எரிகார்கள் ஆனால் அனைத்திலும் குறை கண்டால் கொடுப்பது ஒன்றிய அரசு என்கிறார்கள் , ஆக அவரகள் கூறுவது உண்மை போல் இருக்கிறது உங்கள் நிலையில் நடவடிக்கை எடுக்கவோ , செயல்படுத்தவோ, சொல்வதை செய்யவோ யாருமே இல்லை என்பது உண்மைக்கு, மொத்தத்தில் எல்லாமே நாடகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது வந்தே மாதரம்


YESPEE
ஏப் 02, 2024 14:33

அனைவரையும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிட்டால் ஊழல்கள் ஒழிந்துவிடும்


Lion Drsekar
ஏப் 02, 2024 14:21

இவர்களது பேச்சு எல்லாமே மிக அற்புதமாக இருக்கிறது ஆனால் ஊடகங்கள், பத்திரிக்கைகள் உலக நாடுகள் எல்லாமே இவர்களுக்கு எதிராக செயல்படுகிறது இதை போக்கும் அளவுக்கு உண்மையை யாரும் எங்கும் திரு அண்ணாமலையைத் தவிர வேறு யாருமே தெளிவாக, வெளிப்படையாக எடுத்துக்கூற இயலவில்லை, ஊழலே செய்யவில்லை என்று இவர் கூறினாலும் சோ கூறியது போல் ஊழலுக்கும் இரசீது கொடுத்து அதையும் நேர்மையாக செயல்படுத்தும் அளவுக்கு நாடு சென்றுவிட்டதே? தவாறானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை, அதற்க்கு எல்லா நிலைகளும் நடவடிக்கை எடுக்கும் துறைக்கே எதிராக மற்ற துறைகள் செயல்படுகிறது? இது எங்கு செல்கிறது என்று யாருக்குமே புரியாமல் இருக்கிறது எல்லோருமே எல்லோரையும் திட்டுகிறார்கள், எல்லோருமே தங்களை நேர்மையானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள் முடிவில் யாரை நம்புவது என்று இன்றுவரை விடை தெரியாமல் மக்கள் வாழ்க்கை அமைந்து விட்டது வந்தே மாதரம்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ