வாசகர்கள் கருத்துகள் ( 1 )
If a party is only for Muslims and adavs even Lors Krishna will not like it
பாட்னா: தேர்தல் அரசியலில் ஏற்ற, தாழ்வுகள் தவிர்க்க முடியாத ஒன்று. ஏழைகளுக்கானது எங்கள் கட்சி என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.பீஹார் சட்டசபை தேர்தல் படுதோல்வி, ஆர்ஜேடி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இடையே கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் அதே வேளையில், கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் அல்ல, ஆர்ஜேடியும் தோல்விக்கான காரணங்களை அறிய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறி இருந்தார்.இந் நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் முதல் முறையாக தமது கருத்தை வெளியிட்டு உள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலை தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு தமது கருத்தை கூறியுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது; சமூக சேவை என்பது ஒரு இடைவிடாத செயல். இது ஒரு முடிவில்லா பயணம். இதில் ஏற்ற, தாழ்வுகள் என்பது தவிர்க்கவே முடியாதவை. தோல்வியால் துக்கமும் இல்லை, வெற்றியால் ஆணவமும் இல்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் ஏழைக்களுக்கான கட்சி. அது என்றும் ஏழைகளுக்கு மத்தியில் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கும்.இவ்வாறு தமது பதிவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கூறி உள்ளது.
If a party is only for Muslims and adavs even Lors Krishna will not like it