வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒரே காரில் எட்டு பேர் சென்றுள்ளனர். காரில் பாதுகாப்புக்காக ஒவ்வொரு சீட்டுக்கு ஒரு பெல்ட் என ஐந்து பெல்ட் மட்டுமே ஒரு சாதாரண காரில் இருக்கும். சீட்டு பெல்ட் ஒழுங்காக அனைவரும் போட்டிருந்தாலே பெரும்பான்மையான விபத்துகளில் சம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்கலாம். இந்தியாவிலேயே அதிக விபத்துக்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். இந்த கமெண்ட் படிப்பவர்கள் தயவு செய்து சீட் பெல்ட் அணியுங்கள். காரில் நெடுஞ்சாலையில் செல்லும் போது 100 கேம்ப் வேகத்தில் செல்லும்போதும் மற்றும் இரவு நேரங்களில் கார்களில் செல்லும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதற்குமேல் தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை சாராயம் அருந்தி கார் ஓட்டுவது. எதார்த்தத்தில் சாராய ஓட்டுனர்கள் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள் இது வெளியில் சரியான தகவல்களுடன் வருவதில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தாம்.
"இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். மிகவும் அபத்தம். ரோடுகள் சரியில்லை, வெட்டிய பள்ளங்களை சரிவர மூடுவதில்லை, தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை, அதிகமான விளம்பர பலகைகள், கண் கூசுமளவிற்கு வாகன முகப்பு விளக்கு, ரோட்டில் கட்சி கொடிகள், பேனர்கள் இவற்றை பற்றி சொல்லாமல் நள்ளிரவில் வாகனம் ஓட்டாதீர்கள் என்று சொல்வது முட்டாள்தனமானது. அப்படியெனில் ராணுவ, மருத்துவ, அத்தியாவசிய சேவைகள் இரவில் எவ்வாறு இயங்கும்.
Night travel பண்ண கூடாதுன்னு சொன்னா ஒருத்தனும் சொல் பேச்சு கேட்க மாட்டானுங்க, அவனவனுக்கு பட்டா தான். செத்த பிறகு எதை பற்றியும் சிந்திக்க முடியாது, செத்து போன இவர்கள் நிலைமையும் இப்படி தான். சாகட்டும் விடுங்க.
பகலில் இரு சக்கர வாகனங்கள் ஹெட்லைட்டை எரியவிட்டுக் கொண்டு போகும்படி செய்திருக்கிறார்கள். இப்போது இரவுநேர பயணம் கூடாதுன்னு சட்டம் போட்டுவிட்டார்களானால் சுத்தம். சனி ஞாயறுக்கு நகர நரகத்திலிருந்து தப்பித்து சொந்த ஊருக்கு ஓடும் மத்தியதர வர்கத்தினர்களுக்கும், ஆம்னி பேருந்துகளுக்கும் ஆப்பு.
அப்படி என்றால் இந்த காவல்துறை, "இரவு நேரங்களில் வாகனத்தை ஓட்ட பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா" என சொல்கிறதா?? பொதுவாகவே இந்தியா முழுவதும் சாலைகள் சீராக இருப்பதில்லை. மாறாக குளம், குட்டை, ஏரி, வாய்க்கால், கிணறுகளை ஆங்காங்கே காணலாம் சாலையில் - இது காவல்துறை கண்ணுக்கு தெரியல. இரவு நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் மின்விளக்குகள் எரிவதில்லை / போதிய வெளிச்சம் இருப்பதில்லை - இது காவல்துறை கண்ணுக்கு தெரியல. வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம். அதை எவ்வாறு வாகன ஓட்டிகள் பெறுகிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி, சிலர் முறையாக வாகனத்தை ஓட்டி காட்டி பெற்றாலும் பலர் காசுக்கு லைசென்ஸ் வாங்குகின்றனர் கத்தரிக்காய் வெண்டைக்காய் வாங்குவது போன்று - இது காவல்துறை கண்ணுக்கு தெரியல. நாட்டில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இவை போன்றவையே முக்கிய காரணமாக இருந்தும் அதை கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு செயல்படும் காவல்துறை, ஓட்டுனர் தான் சிறிது நேரம் கண்அசந்தார், அதனால் தான் விபத்து நேர்ந்தது என்று அருகில் இருந்து பார்த்தது போல் கூறும் காவல்துறையின் செயல் வேடிக்கை. உதாரணம் : இரண்டு நாட்கள் முன்பு தாய் தந்தையுடன் மொபட்டில் சென்ற 13 வயது சிறுமி சாலை விரிவாக்கத்திற்காக தோன்டிய 12 அடி பள்ளத்தில் அவர்களை பறிகொடுத்த துயர சம்பவம்.