உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வாக்காளர் திருத்த பணியில் ஆதாரை ஏற்க வேண்டும்!; தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீஹார் வாக்காளர் திருத்த பணியில் ஆதாரை ஏற்க வேண்டும்!; தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, ஆதார் அட்டையை அடையாள சான்றாக ஏற்றுக் கொள்ளும்படி, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஜூன் இறுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. போலி வாக்காளர்கள் பீஹார் முழுதும் தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தனர். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏழு லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், உயிரிழந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர். ஆக., 1ல் வெளியான திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. தகுதி வாய்ந்த வாக்காளர்கள், வரும் 30 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டையை அடையாள சான்றாக ஏற்றுக் கொள்ளும்படி, தேர்தல் கமிஷனுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டதாவது: பீஹாரில் வாக் காளர் பட்டிய ல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, அடையாள சான்றாக, ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்ளும்படி, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மூன்று முறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இதை தேர்தல் கமிஷன் கடைப்பிடிக்கவில்லை. இது, நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கை. ஆதார் அட்டையை குடியுரிமைக்கான சான்றாக ஏற்க வேண்டும் என, நாங்கள் சொல்லவில்லை. மாறாக, வசிப்பிடத்திற்கான சான்றாக தான் ஏற்க சொல்கிறோம். குறிப்பிட்ட இடத்தில் ஒருவர் வசிக்கிறார் என்பதற்கு சான்றாக, ஆதார் அட்டை இருக்கிறது. அது ஏற்கப்படவில்லை எனில், பலரால் ஓட்டளிக்க முடியாது. வாக்காளர்களிடம் இருந்து ஆதார் அட்டையை ஏற்றுக் கொண்ட உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே, தேர்தல் கமிஷன் ஏற்கனவே கூறியுள்ள 11 ஆவணங்களில், 12வதாக ஆதார் அட்டையை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

அனுமதி

தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிடுகையில், ''ஆதார் அட்டையை குடியுரிமை சான்றாக ஏற்க முடியாது. இந்திய குடியுரிமை பெற்ற ஒருவர் தான், தேர்தல்களில் ஓட்டளிக்க முடியும். ''ஆதார் அட்டையை குடியுரிமை சான்றாக கருத வேண்டும் என, மனுதாரர்கள் விரும்புகின்றனர். ''அப்படி செய்தால், அது தவறாக பயன்படுத்தக் கூடும். பீஹாரின் மொத்த வாக்காளர்களில், 99.6 சதவீதம் பேர் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேருக்கும், ஆதார் அட்டையை பயன் படுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ''அப்படி இருக்கையில், யாருக்காக ஆதார் அட்டையை சேர்க்கக் கோரி மனுதாரர்கள் கேட்கின்றனர்?'' என்றார். இதை கேட்ட நீதிபதிகள், 'ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்வோம் என முன்பு சொன்ன தேர்தல் கமிஷன், தற்போது ஏன் மறுக்கிறது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போல ஆதார் அட்டையும் ஆதாரப்பூர்வமான ஆவணம் தானே.

'அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

ஒருவரிடம் ஆதார் அட்டை இருந்தால், அதை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் அவரை சேர்ப்பதில் தேர்தல் கமிஷனுக்கு என்ன பிரச்னை?' என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, ஆதார் அட்டையை, 12வது ஆவணமாக தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது. அதே சமயம், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும் நாங்கள் இந்த உத்தரவில் தெளிவு படுத்துகிறோம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Rathna
செப் 09, 2025 17:08

வங்காளம், ஜார்கண்ட், பீகார் எல்லை போன்ற பகுதிகளின் உதாரணமாக மக்கள் தொகை 100 பேர் என்றால், 125 ஆதார் கார்டுகள் உள்ளது. இதை வைத்து இருப்பவன் எல்லாம் நேபாள எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானிகள், பங்களாதேஷிகள், ரோஹினியாக்கள். இது உச்சத்திற்கு தெரியும் என்பதை பல கேஸ்களில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் பீகார் எல்லை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்று உள்ளது. இது எல்லை பாதுகாப்பு பகுதி. இரு நாடுகளுக்கும் சொந்தம் அல்ல. இந்த பகுதியில் பாகிஸ்தானிகள், பங்களாதேஷிகள், ரோஹினியாக்கள் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த லக்ஷணத்தில்


என்றும் இந்தியன்
செப் 09, 2025 16:52

ஒருவரிடம் ஆதார் அட்டை இருந்தால், அதை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் அவரை சேர்ப்பதில் தேர்தல் கமிஷனுக்கு என்ன பிரச்னை?அதே சமயம், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும் நாங்கள் இந்த உத்தரவில் தெளிவு படுத்துகிறோம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள். வலது பக்கம் திரும்பக்கூடாது என்று சொன்னால் அப்போ இடது பக்கம் திரும்பி பின் இடது பக்கம் திரும்புவது ஒன்றும் தவறில்லை என்று சொல்லும் நீதிபதிகளே ஒன்று ஆதார் அட்டை இதற்கு, இதற்கு மட்டும் தான் என்று சொல்லவும்.


Iyer
செப் 09, 2025 15:16

ஐயா ஓவியரே, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி போலவே பீஹாரிலும் பிஜேபி கூட்டணி 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போவது உறுதி.


திகழ்ஓவியன்
செப் 09, 2025 12:12

அப்போ ரிசல்ட் இப்போவே தெரிந்து விட்டது பிஜேபி க்கு ஆப்பு தான்


vbs manian
செப் 09, 2025 11:50

ஆதார் குடியுரிமையை நிரூபிக்காது என்று சொன்ன இதே நீதிமன்றம் இப்போது ஆதாரை ஏற்க வலியுறுத்துகிறது. போலி ஆதார நிறைய உலா வருகின்றன என்பது தெரியாதா.


G Mahalingam
செப் 09, 2025 11:18

இனிமேலாவது பிறந்த சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும். அதுவும் டிஜிட்டலில் கொண்டு வர வேண்டும்.. அப்படி இருந்தால் மட்டுமே பங்களாதேஷ் பாகிஸ்தான்கள் வோட்டு போட முடியாது. ஓசி ரேஷன் வாங்க முடியாது. கல்வி உதவி தொகை வாங்க முடியாது.


Barakat Ali
செப் 09, 2025 11:02

ஆமா ...... ரோஹிங்கியா, பங்களாதேசிக்கிட்டே ஆதார் இருந்தா அதையும் ஏத்துக்கிட்டு ஓட்டுப்போட அனுமதிக்கணும் ...... உச்சம் சொல்வது இதைத்தான் ......


திகழ்ஓவியன்
செப் 09, 2025 12:12

ரோஹிங்கியா, பங்களாதேசி எல்லோரையும் நீக்கி விட்டு மறுதேர்தல் வைக்கலாமா


Abdul Rahim
செப் 09, 2025 17:01

ஆர் எஸ் எஸ் காரனுக்கு பொறந்த நீ முதல்ல உன் உண்மையானா பேர மாத்து இல்லைன்னா உன் பொறப்புக்கு அது அசிங்கம் ...


ராம.ராசு
செப் 09, 2025 10:46

ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்தது அடவடியானது. PAN அட்டை, வங்கிக் கணக்கு, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்துக்கும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால் தேர்தலில் வாக்களிக்க அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது, தன்னிச்சையான அமைப்பு என்று காட்டுவதற்கான முனைப்பு. ஆனால் நாட்டில் உள்ள அனைத்தும் அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது என்பதை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக அறிவிப்பு செய்தது அடாவடி, அநியாயம். உச்ச நீதிமன்றம் தலையீடு செய்யாவிட்டால், தான் செய்வதுதான் சரி என்று தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் நினைத்து செயல்படுவார்கள். மக்களாட்சி மாண்பு குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும். ஏதோ நீதி மன்றங்கள் சில சமயங்களில் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால்.. மக்களாட்சி மாண்புகள் காக்கப்படுகிறது. இல்லாவிட்டால்... அதிகார்கள் தங்கள் வைத்ததுதான் சட்டம் என்பது போல தன்னிச்சையாகத் செயல்படுவார்கள்.


Suppan
செப் 09, 2025 16:10

நன்றாகப்படித்து விட்டு கருத்திடுங்கள் .ஆதார் குடியுரிமைக்கான சான்று அல்ல.ஆதாரின் நம்பகத்தன்மையை சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு. காங்கிரசும் மம்தாவும் கோடிக்கணக்கான வங்கதேசிகளையும் ரொஹிங்கியாக்களையும் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் அனுமதித்துவிட்டு அவர்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றையும் வாங்கிக்கொடுத்துள்ளது. எல்லாம் வாக்கு வங்கி செய்யும் குறளி வித்தை.


என்றும் இந்தியன்
செப் 09, 2025 17:05

குழந்தாய், ஆதார் அட்டை இந்தியாவில் மறைமுகமாக குடி பெயர்ந்த எல்லா பங்களாதேஷிகளிடம் மம்தா பானெர்ஜி கொடுக்கவைத்துள்ளார் எல்லா எம்பி எம் எல் ஏக்கள் மூலமாக. ஆனால் அதனுடன் கூட பான் கார்டு டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் எலெக்ஷன் ஐடி அவர் கொடுக்க வைக்க முடியவில்லை. ஆகவே தான் இந்த கண்டிஷன்


Yuvaraj Velumani
செப் 09, 2025 17:43

200 உபி சோம்பு ரொம்ப தூக்காத


saravan
செப் 09, 2025 10:44

இந்த வந்திட்டாருல்ல ஆதார் அட்டையே மாநில அரசு மம்தா போன்ற அரசுகள் ஊடுருவல் காரர்களுக்கு கொடுத்திருக்கிறது குடியுரிமை ஆதாரம் இல்லை பின் எப்படி வாக்குப்போட அந்நியன் அனுமதிக்கப்படுகிறான்


Abdul Rahim
செப் 09, 2025 20:32

மேற்கு வங்கத்தில் ஓட்டு திருட்டு ஜனதா எப்படி இத்தனை சீட் ஜெயித்தது வங்காளதேசத்தினர் ஒட்டு போட்டுத்தானா ?????


GMM
செப் 09, 2025 10:07

2009 முதல் ஆதார் வந்து 16 ஆண்டுகள். வாக்கு போட 18 வயது பூர்த்தி செய்ய வேண்டும். 2028ல் தான் ஆதார் அடிப்படையில் 18 ஆண்டுகள் பூர்த்தி ஆகும். பார் கவுன்சில் ஜின்னா அதிகரித்து விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை