கிராம நல பணியாளர்களுக்கு பீஹாரில் ரூ.25,000 உதவித்தொகை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில், 'விகாஸ் மித்ரா' திட்டத்தின் கீழ் கிராமங்களில் பணிபுரியும், 10,000க்கும் மேற்பட்டோருக்கு ஒரு முறை உதவித்தொகையாக, 25,000 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 தொகுதிகளுக்கு அக்., - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் , அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பீஹாரில் விகாஸ் மித்ரா திட்டத்தில் கிராமங்களில் பணிபுரியும், 10,000க்கும் மேற்பட்டோருக்கு ஒரு முறை உதவித்தொகையாக, 25,000 ரூபாய் வழங்கப்படும் என, அவர் நேற்று அறிவித்தார். மேலும், அவர்களின் போக்குவரத்து செலவுக்கான மாத உதவித்தொகை, 1,900 ரூபா யில் இருந்து 2,500 ஆகவும்; எழுது பொருள் வாங்குவதற்கான உதவித்தொகை, மாதத்திற்கு 900 ரூபாயி ல் இருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மிகவும் பின்தங்கிய சமூகத்தினர் வசிக்கும் கிராமங்களில், அரசு திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியில், விகாஸ் மித்ரா எனப்படும் கிராம நல பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.