வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒய்வு, மரத்தடி உறக்கம், மூணு கல்லு. ஆடுபுலி ஆட்டம், மூணு சீட்டு, ஊர் வம்பு இதெல்லாம்தான் 100 நாள் வேலையே இல்லாத திட்டம். இப்போ 125 நாள் திட்டமா மாறுது.
அரசுத் திட்டங்கள் எதற்கும் தலைவர்கள் எவர் பெயரையும் வைக்கக்கூடாது அவர்களை நினைவுபடுத்தும் படங்கள் வாசகங்கள் இருக்கக்கூடாது மதச் சார்பின்மை போல அரசியல் சார்பின்மை இருக்கக் கூடாது இந்த ஊரக வேலை வாய்ப்புத் திட்டமே குறிப்பாகத் தமிழக மக்களிடையே அரசு கொடுக்கும் ஒரு மானியமாகவே/ உரிமையுடன் கோரும் பிச்சையாகவே கருதப்படுகிறது. இது ஒரு சில முகவர்களுக்கு வாழ்வாதாரமாகவே இருக்கிறது. அரசு பனித் தேர்வாணையம் போல ஏதேனுமொரு அமைப்பு இருந்தால் முறைகேடுகள் கொஞ்சம் குறையும் இதுவரையில் இந்தத் திட்டத்தால் என்ன நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ன செலவு என்றெல்லாம் யாரேனும் சொல்ல முடியட்டுமா இனியாவது இத்திட்டங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும் இதைவிட சிறைச்சாலைகளில் சிறு குற்றவாளிகளைக் கொண்டு நடத்தப்படும் பல செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது எனச் சொல்லப்படுகிறதே
இதில் நடக்கும் வேலை என்பது வெறும் கண் துடைப்பு. கிராமப்புறங்களில் வசதி படைத்த வீட்டில் உள்ளவர்கள் கூட வேலை செய்கிறேன் எனக்கூறி பணம் பண்ணுகிறார்கள். கொஞ்ச நாட்கள் முன்னே செய்தித்தாள் செய்தி ஒன்று ..... 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ய சென்றிருந்த ஒரு பெண் வீட்டில் 100 பவுன் நகை திருடப்பட்டது. .........
காந்தியைக் கொன்றவர்களை ஆதரிப்பவர்கள் பெயரையா விட்டுவைப்பார்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது பெரும்பாலான மாநிலங்களில் ஏன், அனைத்து மாநிலங்களிலும் என்றுகூடச் சொல்லலாம் வரிப்பணம் விரயம் தானே தவிர வேறொன்றுமில்லை. இதுவரையில் வழங்கப்பட்ட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையை ஒவ்வொரு மாநிலமும் வெளியிட அறிவுறுத்தினால், இதுவரையில் செய்யப்பட்ட விரயம் எவ்வளவு என்பது தெரியவரும். ஊரகத் துறை அதிகாரிகள் ஊதியத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நிலவியது. நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் வரிப் பணத்தை, மாவட்டந்தோறும் தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்த முதலீடு செய்வதுதான் அறிவார்ந்த பொருளாதாரம். மாநிலங்களின் பங்களிப்பு இருந்தால்தான், ஓரளவுக்கு கண்காணிப்பு இருக்கும் என்பது வரவேற்புக்குரிய முடிவு.
ஒரு சில தவறுகள் நண்டாந்திருக்கலாம் . அனால் பெரும்பரி யான மக்கள் இதில் பயன் அடைந்து வருகிறார்கள். அவர்கள் நிலையில் இருந்து பார்த்தல் தான் புரியும்
உக்காந்து பணம் வாங்குற திட்டம்தான் இது. மேலும் பணத்தை கொள்ளையடிக்க கட்சிக்காரர்கள் உனக்கு இன்னோரு வழி. கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கம். இதுக்கு இது வரை எந்த வெள்ளை அறிக்கையும் கிடையாது. இது வரை இது ஒரு வெட்டிச்செலவு. இந்த திட்டத்தை தூக்கி எறிந்து விட்டு பழைய படி அவன் அவன் வேலை செய்து சாப்பிடச் சொன்னால்தான் நாடு உருப்படும் இதனால் விவசாய வேலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பது கண்கூடு.
உண்மையில் மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள். நூறு நாள் வேலை திட்டத்தில் மாநில அரசு நிதியை தவறாக கையாள்கிறது. இனி அது நடக்காது.
காந்தி பேரை மாற்றியது சரிதான்
unmai