உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிட்காயின் மோசடி : சுப்ரியா சுலே மீது மாஜி ஐ.பி.எஸ்., புகார்

பிட்காயின் மோசடி : சுப்ரியா சுலே மீது மாஜி ஐ.பி.எஸ்., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிட்காயின் மூலம் திரட்டிய மோசடி பணத்தை தேர்தலில் பயன்படுத்தியதாக தேசியவாத காங்., எம்.பி., சுப்ரியா சுலே மீது புகார் எழுந்துள்ளது. இம்மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைமையில் மஹாயுதி கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்., சரத்சந்திர பவார் பிரிவு அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி களத்தில் உள்ளது.இந்நிலையில் தேசியவாத காங்., சரத் சந்திரபவார் கட்சி லோக்சபா எம்.பி.,சுப்ரியா சுலே, மாநில காங்., தலைவர் நானா பட்டோல் ஆகியோர் மீது புனேயைச் சேர்ந்த மாஜி ஐ.பி.எஸ்.அதிகாரி ரவீந்திரநாத் பாட்டீல் , பாக்யாஸ்ரீநெளதாகே ஆகியோர் புனே சைபர் குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்தனர். அதில் பணமில்லா பண பரிவர்த்தனை அடிப்படையில், கிரிட்டோ கரன்சி, பிட்காயின் மூலம் திரட்டிய மோசடி பணத்தை சுப்ரியா சுலே, நானா பட்டோல் ஆகியோர் தேர்தலில் பயன்படுத்தியதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.மாஜி போலீஸ் அதிகாரியின் குற்றச்சாட்டை சுப்ரியா சுலே மறுத்துள்ளார். எந்தவிசாரணைக்கும் தயார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
நவ 21, 2024 06:04

சுலே... பலே பலே. சும்மா சொல்லக்கூடாது காங்கிரஸ் வாடை இவர்களை குற்றம் செய்ய தூண்டி இருக்கிறது...


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 20, 2024 22:33

மராட்டியக் கட்டு மரத்தின் வாரிசு எப்படி இருப்பார் ??? அவர் நம் கனிமொழிக்கு நண்பியும் கூட ....


Rpalnivelu
நவ 21, 2024 12:03

என்னது கனிமொழிக்கு நண்பியா பலே பலே அப்ப கன்பர்மா சொல்லிடலாம். சுப்ரியா சூலே மோசடிப் பேர்வழிதான்னு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை