உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தலில் சாதனை படைத்த பாஜ!

பீஹார் தேர்தலில் சாதனை படைத்த பாஜ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்பீஹார் தேர்தலில், மற்ற அனைத்து கட்சிகளையும் விட, பாஜ வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் அதிகம் என்று தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. பீஹார் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதாதளம், சிராக் பாஸ்வானின் லோக்ஜன் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தேஜ கூட்டணியில் போட்டியிட்டன.இதில் மற்ற அனைத்து கட்சிகளையும் விட, பாஜவின் வெற்றி- முன்னிலை சதவீதம் அதிகமாக இருப்பது, அக்கட்சியினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மொத்தம் 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 87 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இது, 86 சதவீதம் வெற்றியாகும்.இது, பிரதமர் மோடி மீது, பீஹார் மாநில மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள். கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 74 சதவீதம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. லாலுவின் ஆர்ஜேடி வெறும் 24 சதவீதம், காங்கிரஸ் வெறும் 9 சதவீதம் மட்டுமே வெற்றி பெறும் பரிதாப நிலையில் உள்ளன.கடந்த சட்டமன்றத்தில் லாலுவின் ஆர்ஜேடி 75 எம்.எல்.ஏ.,க்களுடன் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். இப்போது அந்த இடங்களை கூட எதிர்க்கட்சிகளால் கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2025 பீஹார் தேர்தல்கட்சி -போட்டி -முன்னிலை- வெற்றி சதவீதம்* பாஜ- 101- 87- 86 சதவீதம்* ஐஜத- 101- 75- 74 சதவீதம்* ஆர்ஜேடி 143- 35- 24 சதவீதம்* காங்கிரஸ் 61- 6- 9 சதவீதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMESH KUMAR R V
நவ 14, 2025 12:28

பீகார் மக்கள் தேசப்பற்று மிக்கவர்கள். தாமரை மலரும்.


Balasubramanian
நவ 14, 2025 12:19

எல்லாம் SIR ஆல் வந்த வினை! உண்மை ஓட்டு உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு துட்டு கிடையாது, ஜாதி மத வாதங்கள் எடுபடாது - ஜன நாயக முறைப்படி - ஓட்டு திருட்டு வாதம் கூட செல்லாது - , கிட்ட தட்ட எழுபது சதவிகித மக்கள் வாக்களித்தால்? இது மாதிரி தான் நடக்கும்


Venugopal, S
நவ 14, 2025 12:12

EVM மற்றும் ஓட்டு திருட்டு அப்டின்னு ஏற்கனவே பிட்டு போட்டு வைத்து ஆகிவிட்டது. மறுபடியும் மக்களை கேவலமான முறையில் நடத்துவது தான் இன்டி கூட்டணியின் சாதனை


மேலும் செய்திகள்







புதிய வீடியோ