உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய தேசியக்கொடியுடன் ஸ்காட்லாந்து சிகரத்தில் அண்ணாமலை!

இந்திய தேசியக்கொடியுடன் ஸ்காட்லாந்து சிகரத்தில் அண்ணாமலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓஸ்லோ; ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றிருக்கிறார். படிப்பை முடித்த பின்னர் வரும் டிசம்பர் மாதம் சென்னை திரும்புகிறார். இந் நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள 1,345 மீட்டர் உயரம் கொண்ட பென் நெவிஸ் சிகரம் மீது தேசியக்கொடியுடன் அண்ணாமலை ஏறி உள்ளார். இந்த சாதனையை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவில் அண்ணாமலை கூறி இருப்பதாவது; ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் சிகரம் பிரிட்டனின் உயரமான சிகரம். இந்த சிகரத்தில் ஏற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சவாலை ஏற்றுக் கொண்டு உச்சியை அடைந்தேன்.எனது இந்த சாதனையை நான் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். அவரின் தொலைநோக்கு பார்வையான மிஷன் லைப் என்பது ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்ட ஒரு பிரசாரம்.இந்த பயணம் மிகவும் அறிவூட்டுவதாக இருந்தது. எங்கள் பயணம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான நீடித்த நட்பின் அடையாளமான பென் நெவிஸ் சிகரத்தில் மூவர்ணக்கொடியுடன் ஏறியதில் பெருமை அடைகிறேன்.இவ்வாறு தமது பதிவில் அண்ணாமலை கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Anand
அக் 15, 2024 14:12

படிக்க போனவர் ஏன் கொடி பிடிக்கிறார் ?


Murugesan.P
செப் 28, 2024 23:20

இந்திய அரசியலில் குறிப்பாக தமிழக அரசியல் வரலாற்றில் 2024 பாராளுமன்ற தேர்தல் பாரதிய ஜனதா ஏற்படுத்தப்பட்ட பின்னடைவு என்பது முழுக்க முழுக்க திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் என்றால் அது மிகையாகாது படிப்பு பதவி என்பது வேறு, அரசியல் அனுபவம் என்பது வேறு ,,,என்ன செய்ய காலம்தான் பதில் சொல்ல வேண்டும்


Murugesan.P
செப் 28, 2024 23:17

திரு அண்ணாமலை அவர்கள் பயிற்சி பணி வேறு,அரசியல் பணி வேறு என்பதை கணிக்க தவறிவிட்டார் அரசியல் அனுபவம் என்பது வேறு கல்வி தகுதி அனுபவம் என்பது வேறு இதன் பலனை நடப்பு இந்திய ஆட்சி தலைமை அனுபவிக்கிறது என்பது நிதர்சன உண்மை


வல்லவன்
செப் 28, 2024 21:21

மல மலை ஏறிடிச்சி ஹி ஹி ஹி


அப்பாவி
செப் 28, 2024 19:39

அங்கே யார் போனாலும் சுதந்திரமா போகலாம். இங்கேன்னா ஸ்காட்லாந்து சைஸ் ஏரியாவுக்கு 22000 போலீசப் போட்டு மக்களை அடிச்சு முடக்கி செக்யூரிட்டி குடுப்பாங்க. இவரை மலை மேலே தனியா ஏறமாட்டாரு. ஒரு நூறு எடுபுடிகள் கூடவே வரணும். யாருக்கு அர்ப்பணிக்க முடியாது கோவாலு.


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 21:08

the route is incredibly steep and certainly challenging என்று குறிப்பிடப்பட்ட இடம் பென் நெவிஸ் ..... அத்தனை எடுபிடிகளை அவ்வளவு தூரம் / உயரம் அழைத்துச் செல்ல முடியுமா, சட்டச்சிக்கல் வராதா கோவாலு ????


sundarsvpr
செப் 28, 2024 19:37

வெளிநாட்டிற்கு சென்று அறிவு வளர்த்தல் அரசியல்வாதிக்கு உகந்தது அல்ல. பெருமையும் அல்ல. அதனை எப்படி தாய்நாட்டிற்கு உபோயகப்படுத்துகிறார் என்பது கவனிக்கவேண்டியது. கட்சி இரண்டாவது இடம் பயணம் பெருமைக்கு உரியதாய் அமையும்.


satheesh kumar
செப் 28, 2024 21:37

இங்க அறிவே இல்லாதவங்க அமெரிக்கா சென்று பொய் ஒப்பந்தம் போட்டிட்டு, சென்று வந்த தேதி கூட சரியாய் சொல்ல தெரியல.


லண்டன்குமார்
செப் 28, 2024 19:07

தமிழகத்து டென்சிங் சாதனையாளர் வாழ்க. இங்கே வந்த உடனே ஒரு பாராட்டு விழா நடத்திருவோம். அது சரி, படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?


வளையாபதி
செப் 28, 2024 19:04

அந்நிய அடையாளங்களை ஒழிக்காம இந்தியா பிரிட்டன் நட்பு அது இதுன்னு பேசுறீங்களே...


அப்பாவி
செப் 28, 2024 19:03

யாரோட நாட்டு சிகரத்தை யாருக்கு அர்ப்பணிப்பது? இங்கே அதுமாதிரி செய்தால் தேசத்துரோக குற்றம்னு சொல்லி உள்ளே தள்ளிடுவாங்க.


k Venkatesan
செப் 28, 2024 20:14

சிகரத்தை அர்பணிக்கவில்லை. தனது சாதனையை அர்பணித்துள்ளார். நீர் உண்மையிலேயே அப்பாவிதான்.


Raja Vardhini
செப் 28, 2024 17:20

கெடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்.. கெழவிய தூக்கி மனையில் வை.... தமிழ்நாட்ல பி.ஜெ.பி யை முட்டு சந்துக்கு தள்ளியாச்சு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை