| ADDED : பிப் 13, 2024 06:49 AM
பெங்களூரு: ''முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா மூத்தவர். அவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்,'' என, சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் காட்டமாக தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ.,வினருக்கு மானம், மரியாதை இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் 5,233 வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் நடந்துள்ளன. வெறும் 22 வழக்குகள் மட்டுமே நிரூபணமாகின. சோதனைக்கு ஆளானவர்களில், 3,000 பேர் காங்கிரசார். இவர்களையே குறிவைத்து சோதனை நடக்கிறது.ஈஸ்வரப்பாவுக்கு பதவி போய்விட்டது. அவர் மூத்தவர்; வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருக்க வேண்டும். இவரால் முதல்வர் சித்தாமையா, துணை முதல்வர் சிவகுமாரைத் தொடவும் முடியாது. சித்தராமையா, சிவகுமாரின் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இதிலிருந்தே அவருக்கு, எவ்வளவு பயம் உள்ளது என தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.