மேலும் செய்திகள்
பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி
09-Sep-2025
திருவனந்தபுரம்: 'டிவி' விவாத நிகழ்ச்சியில் காங்., எம்.பி., ராகுலுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ., நிர்வாகி போலீசில் சரணடைந்தார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 'டிவி' விவாதத்தில் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளரும், அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் முன்னாள் மாநில தலைவருமான பிரிந்து மகாதேவ் என்பவர், இந்தியாவில் மக்கள் நரேந்திர மோடி அரசாங்கத்துடன் உள்ளனர். வங்கதேசம் அல்லது நேபாளம் போன்று அமைதியின்மையை உருவாக்க ராகுல் விரும்பினால் அவர் மார்பில் சுடப்படுவார் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. காங்கிரஸ் நிர்வாகிகள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் எம்.பி., கடிதம் மூலம் புகார் அளித்தார். பிரிந்து மகாதேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த திருச்சூர் மாவட்டம் பெரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். பின்னர் அவரை கைது செய்து குன்னங்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிரிந்து மகாதேவ் வன்முறையை ஊக்குவிப்பவர் அல்ல என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
09-Sep-2025