உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களை கொள்ளையடித்து காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்துகிறது: பிரதமர் மோடி

மக்களை கொள்ளையடித்து காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்துகிறது: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பன்ஸ்வாரா: '' மக்களை கொள்ளையடித்தும், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டும் காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்தி வருகிறது,'' என பிரதமர் மோடி பேசினார்.ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டங்களையும் துவக்கி வைத்தார். 3 வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்தார். அணுமின் நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

மாநிலங்களுக்கு முக்கியத்துவம்

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: நவராத்திரி அன்று 9 வகையான சக்திகளை நாம் வணங்குகிறோம். ராஜஸ்தானில் இருந்து எரிசக்தி துறையில் இந்தியாவின் வலிமைக்கு ஒரு புதிய சகாப்தம் எழுதப்படுகிறது. 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய மின்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.21ம் நூற்றாண்டில் வேகமாக முன்னேற விரும்பும் எந்தவொரு நாடும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின்சாரத்துக்கு காங்கிரஸ் எப்போதும் முக்கியத்துவம் அளித்தது கிடையாது. 2014 ல் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்த போது, 2.5 கோடி வீடுகள் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கடந்தும் 18 ஆயிரம் கிராமங்களில் மின்கம்பங்கள் இல்லை.

மக்கள் இயக்கம்

பெரிய நகரங்கள் நீண்ட நேரம் மின்சார தடையை சந்தித்து வந்தன. கிராமங்களில் 4-5 மணி நேரம் மின்சாரம் இருந்தாலே அதனை கொண்டாடினர். 2014 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கினோம். 2.5 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. சுத்தமான எரிசக்தியை மக்கள் இயக்கமாக மாற்ற பணியாற்றி வருகிறோம். மக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசால் ஏற்பட்ட காயத்தை பாஜ அரசு குணப்படுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில், வினாத்தாள் கசிவுக்கு மையமாக ராஜஸ்தான் இருந்தது. ஜல்ஜீவன் இயக்கம், ஊழல் காரணமாக நிறுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததுடன், பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றங்கள் மற்றும் சட்டவிரோத மதுபான தொழில் வளர்ந்தது. ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்ததும், நாங்கள் சட்டம் ஒழுங்கை பலப்படுத்தினோம். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம்.

தனி இலாகா

ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழாவை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. தினசரி பயன்படுத்தும் பொருட்கள் விலை குறைந்துள்ளன. ஆதிவாசி சமூகத்தினரை காங்கிரஸ் எப்போதும் புறக்கணித்தது. அவர்களின் தேவைகளை அக்கட்சி புரிந்து கொண்டது கிடையாது. ஆனால் பாஜ அரசு அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு என தனி இலாகாவை உருவாக்கினோம். வாஜ்பாய் ஆட்சியில் பழங்குடியினருக்கு என முதல்முறையாக தனி இலாகா உருவாக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Senthoora
செப் 26, 2025 06:41

ஜி, காயம் ஆற 12 வருடம் ஆகியும் முடியலையா? உங்க GST வரி காயம் மாறவே மாறாது, தேர்தல் வருது இன்னும் தேடிப்பாருங்க காயங்கள் இருக்கும், அள்ளி வீசுங்க.


pakalavan
செப் 25, 2025 22:29

கதைகளை படிக்க மிகவும் சுவாரசியமா இருக்கு


D Natarajan
செப் 25, 2025 21:27

12 ஆண்டுகள் கடந்து விட்டது. பிஜேபி இன்னும் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல. பிரதமரை எல்லோரும் மதிக்கிறார்கள் . ஆனால் இன்னும் காங்கிரெஸ்ஸை குறை சொல்லுவது ஏற்றுக் கொள்ள முடியாது


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2025 20:55

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை.


Raman
செப் 25, 2025 21:08

Poi- Hind puram


V Venkatachalam
செப் 25, 2025 21:50

கன்கிராட்ஸ். பிரான்ஸ் அதிபர் மாதிரி சாராய யாவாரி சிறை செல்வார்ங்குறதை சூசகமா சொல்லிப்புட்டீக. திரும்பவும் உங்களுக்கு கன்கிராட்ஸ்..


Iyer
செப் 25, 2025 20:46

கொள்ளையா ?? இன்னும் 5 வருடங்கள் - நீடித்து இருந்தால் - இவர்கள் பாரதத்தையே சீனாவுக்கு அடகு வைத்திருப்பார்கள்.


Prem
செப் 25, 2025 20:00

அப்போ நீங்க ஒன்னும் செய்யல...?


நிக்கோல்தாம்சன்
செப் 25, 2025 21:17

கருநாடகம் வந்து பாரு , இவங்க டிசைன் என்னவென்று புரியும் , காரி துப்புகிறார்கள் ஆண்கள் இந்த டாங்கிறஸ் மீது


பிரேம்ஜி
செப் 25, 2025 19:58

12 வருடங்களாக கேட்டு கேட்டு புளித்துப் போய் விட்டது! புதிதாக ஏதாவது காரணம் சொல்லுங்கள் அய்யா!


ராஜா
செப் 25, 2025 19:36

உண்மை அல்லாததை மட்டுமே கூறி ஆட்சிக்கு வந்து நோ யூஸ் , செத்த பாம்பு அல்ல இல்லாத ஒன்றை பாம்பு என்று சொல்லி அதை அடித்தது போல பாவனை செய்து இத்தனை வருடங்கள் வடைகள் சுட்டு வைத்து விட்டார்கள் விற்றார்கள் . அடுத்த சான்ஸ் யாருக்கோ ?


நிக்கோல்தாம்சன்
செப் 26, 2025 09:10

அடுத்து சான்ஸ் படிக்கும் வாய்ப்பிருந்தும் படிக்காமல் வாய்ப்பு கொடுக்கலாமா ?


Sivakumar
செப் 25, 2025 19:32

நீங்கள் குறைகூறும் காங்கிரஸ் தான் லாலுபிரசாத் யாதவை சிறையில் தள்ளியது. சக்கன் புஜ்பல் ஐ சிறையில் தள்ளியது. தமிழ்நாட்டின் எ1 குற்றவாளி என அண்ணாமலை சொன்னவரையும் சிறையில் தள்ளியது காங்கிரஸ். உங்கள் ஆட்சியில் யாரவது ஒரு பெரும் அரசியல்வாதி சிறை சென்றதுண்டா ? இதல்லவா விஞ்சான ஊழல்


V Venkatachalam
செப் 25, 2025 19:49

கஜ்ரிவாலு உள்ளே அனுப்பியது கான்+கிராஸ்தான். எனக்கு சந்தேகமேயில்ல. அன்னை சோனியா பப்பு ராவுலு சகோ-தெரி பிரியங்கா வாத்ரா உழைக்காமல் 5000 கோடிக்கு சொத்து சேர்த்த கார்கே மத்த எல்லாரும் காணாம போய்ட்டாங்க இவிங்க தான் யோகி கிட்ட மிரட்டி மது பான ஊழல் கஜிரி வாலுவை உள்ளே வச்சாங்க. கஜினி ரொம்ப நல்ல மனுஷன் பாவம். நல்லதை பேசி கெட்டதை செஞ்சுட்டாரு. இல்லாங்காட்டி அவுரு பிரதமராக ஆகி இருக்கோணும்.


Sivakumar
செப் 25, 2025 19:28

ஹிமந்தா பிஸ்வா சர்மா - ஊழல் குற்றாவளி என அமித்ஷா 2014இல் கூறினார். அவர் இன்று பிஜேபி CM .அஜித் பவார் சிறையில் மாவாட்டப்போகிறார்னு மோடி 5 ஆண்டிகளுக்கு முன் சொன்னார். இன்று அவர் உங்கள் தயவில் கட்சியை உடைத்து துணைமுதல்வர். இவர்களையெல்லாம் உள்ளே போட புதுசா சட்டம் வேண்டாம்.கொஞ்சம் அரசியல் பேராசை இல்லாத நேர்மை வேணும். அதுதான் சுத்தமா கிடையாதே உங்க கிட்ட.


சமீபத்திய செய்தி