மேலும் செய்திகள்
வேலை நிறுத்தம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்
15-Nov-2024
பாலக்காடு; நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என, பா.ஜ., மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கேரள மாநில, பா.ஜ., விவசாயிகள் சங்கத்தின் பாலக்காடு மாவட்டத் தலைவர் வேணு தலைமையில், நேற்று கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நெல் கொள்முதல் செய்யும் அரசு, விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ஆதார விலையை உடனே வழங்க வேண்டும். மேலும், நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை கடன்காரர்கள் ஆக்காமல் பாதுகாக்க வேண்டும். நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசுக்கு இணையாக கேரள அரசும் உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், வரும் நாட்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட செயலாளர் ஓமனகுட்டன், பொதுச் செயலாளர்கள் ரமேஷ், சுரேஷ், சந்திரசேகரன், சந்தோஷ்குமார் கலந்து கொண்டு பேசினர்.
15-Nov-2024