உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., செய்வது துஷ்பிரயோக அரசியல் அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்

பா.ஜ., செய்வது துஷ்பிரயோக அரசியல் அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்

புதுடில்லி:“பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, தலைநகர் டில்லியில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி, 43 நிமிட உரையில் 39 நிமிடங்களை தலைநகர் மக்களையும் அவர்கள் இரண்டு முறை தொடர்ந்து தேர்ந்தெடுத்த அரசையும் சபித்துள்ளார்,” என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:டில்லியில் ஆம் ஆத்மியில் 10 ஆண்டுகால ஆட்சி செய்து வருகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசியல் துஷ்பிரயோகம் மற்றும் தனிப்பட்ட தாக்குதல் மட்டுமே நடத்துகிறது.மோடி தன் 43 நிமிட உரையில் 39 நிமிடங்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், டில்லி மக்களையும் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பேசியுள்ளார். கடந்த 10 வருடங்களில் ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை பட்டியலிட மூன்று மணி நேரம் கூட போதாது. ஆனால் மோடியோ, நேற்று கூறிய எந்த வளர்ச்சிப் பணியையும் மத்திய பா.ஜ., அரசு செய்யவில்லை. அவற்றைச் செய்திருந்தால், அவர் டில்லி மக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. டில்லி மக்களை துஷ்பிரயோகம் செய்து சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற பா.ஜ., முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.அசோக் விஹாரில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “ஆம் ஆத்மி அரசு 10 ஆண்டுகளாக பேரழிவுக்கு கொண்டு சென்று விட்டது,” என, கூறியிருந்தார். மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், ஆம் ஆத்மி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோல், பா.ஜ.,வும் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலையில், காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் களத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி