உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாசடைந்த யமுனை ஆற்றில் நீராடிய பா.ஜ., தலைவருக்கு உடல்நலக்குறைவு; ஆம்ஆத்மி மீது புகார்

மாசடைந்த யமுனை ஆற்றில் நீராடிய பா.ஜ., தலைவருக்கு உடல்நலக்குறைவு; ஆம்ஆத்மி மீது புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் அசுத்தம் மிகுந்த யமுனை ஆற்றில் குளித்து நீராடிய பா.ஜ., தலைவர் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தேர்தல் வாக்குறுதியின்படி, டில்லியில் உள்ள யமுனா நதியை தூய்மைப்படுத்த ஆம்ஆத்மி அரசு தவறி விட்டதாக பா.ஜ., குற்றம்சாட்டி வரும் நிலையில், டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திர சச்தேவா, யமுனை நதியில் நீராட முடியுமா என்று முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சவால் விட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி யமுனை நதியில் சச்தேவா குளித்து வழிபாடு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இன்று டில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறு மற்றும் உடல் அரிப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட டில்லி பா.ஜ., யமுனை ஆற்றை தூய்மைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை டில்லி அரசு தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதை மன்னிக்கும்படி வேண்டி விரேந்திர சச்தேவா யமுனையில் குளித்து வழிபாடு நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.,வின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த டில்லி சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய், 'பா.ஜ., நாடகமாடுகிறது. யமுனை ஆறு மாசடைவதற்கு உத்தரபிரதேசம், ஹரியானா மாநில அரசுகள் தான் காரணம். அங்குள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதனால் தான் அசுத்தம் ஏற்படுகிறது,' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K S SAHAYARAJ
அக் 28, 2024 15:04

டில்லி முதல்வரின் அதிகாரத்தை எல்லாம் பறித்து துணை நிலை ஆளுநர் அவர்களுக்கு கொடுத்து விட்டு ஆம் ஆத்மி கட்சியை குறை சொல்வது என்ன நியாயம். உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல், உச்சநீதிமன்றம் விடுப்பில் சென்ற மறுநாளே ஒரு ????????? யை வெளியிட்டு, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் Bill யை பாஸ் செய்தது இங்கு கருத்து தெரிவிக்கும் எத்துணை நபர்களுக்கு தெரியும்?


Subash BV
அக் 27, 2024 19:31

Why blame BJP if Aap is unfit to rule.


K S SAHAYARAJ
அக் 28, 2024 15:07

??????


Arachi
அக் 27, 2024 09:17

யமுனையாற்றை சுத்தம் பண்ண முடிந்தாலும் முடியும் ஆனால் பாஜகவினரை சுத்தம் பண்ண முடியாது. நதிகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. யமுனையின் அவ்வளவு சுத்தமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நதியை சுத்தம் பண்ண மாநில அரசிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை.


K S SAHAYARAJ
அக் 28, 2024 15:06

உண்மை. எப்படியாவது ஆம்ஆத்மி கட்சியை காலி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாடகம் எல்லாம்.


Subramanian
அக் 27, 2024 08:52

ஆச்சாரம் -ஆச்சாரம் என்று சொல்லி, காலில் பூஜை பொருட்கள் படக்கூடாது என்று நதியிலே கொட்டுவார்களாம் .பின்னர் அதை சுத்தம் செய்ய சொல்வார்களாம் .எப்படி ஆகம நாடு?


Purushothaman
அக் 27, 2024 13:26

ஆமாம். பல மூட நம்பிக்கைகள்தான் பல சுற்றுபுற சூழ்நிலைகளை பாழாக்குகின்றன. என்று ஒழியும் இந்த மூட நம்பிக்கைகள்.


Subash BV
அக் 27, 2024 19:33

Converted population increasing difficult for hindus. Put Hinduism first.


INDIAN
அக் 27, 2024 07:11

ஏற்கனவே கங்கையை சுத்தம் செய்வதாக வாக்குறுதி அளித்து பின்னர் எதுவும் செய்யாமல் நிதியை ஏப்பம் விட்டது .


Dhurvesh
அக் 26, 2024 22:07

ஆண்டுக்கு 3000 கோடி அப்ப 30000 கோடி இதற்கு வெள்ளை அறிக்கை கேட்போமா இங்கு 4000 கோடி வெளி நாடு கடன் அதற்கே வெள்ளை அறிக்கை


கிஜன்
அக் 26, 2024 20:59

இந்த ஆளு பாதி தான் முங்கினாரு ...அதுவும் ஒரு சாக்கடை போல நீர் தேங்கி நிற்கும் இடத்தில் ... அதுக்கே சீக்கா ? 10 ஆண்டுகளாக யமுனையை சுத்தப்படுத்த ஒதுக்கிய நிதி ....?


Sivagiri
அக் 26, 2024 20:23

தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் , ஆயில்கள் , கெமிக்கல்கள் , - - இதோடு , 140 கோடி மனிதர்கள் வெளியேற்றும் கழிவுகள் - - ஆக , அனைத்தும் சேரும் இடங்கள்தான் - கங்கை , யமுனை , நர்மதை , பிரம்மபுத்ரா , கோதாவரி , கிருஷ்ணா , காவிரி , வைகை , தாமிரபரணி


பாமரன்
அக் 26, 2024 20:10

இவனுவ பண்ற காமெடிக்கு அளவே இல்லாமல் போயிட்டு இருக்கு மை லார்ட்...


Lion Drsekar
அக் 26, 2024 17:51

புனித நதிகளை சாக்கடை நீராக்கிய பெருமை நம்மவர்களுக்கே சேரும், அதை சுத்தம் செய்கிறோம் என்ற பல நிலைகளில் பெரும் பணக்காரர்களான கதைகள் சரித்திரத்தில் உள்ளது, தெரிந்தும் ஆறு என்ற பெயருக்கு பதிலாக சாக்கடையில் என்று போட்டிருக்கலாம், திரு பச்சையப்பா முதலியார் அன்று கூவம் நதியில் குளித்து பின்பு திருக்கோவிலுக்குச் சென்று விபூதி அணிந்து தனது அன்றாட ஏழைகளை கவனித்தார் , சுதந்திரம் பெற்றபின்பு எல்லா புனிதங்களையும் வேரோடு அழிப்பதே தற்போதைய நிலை , இது எல்லா நிலைகளிலும் , எல்லா ஊர்களுக்கும் , நாடுகளுக்கும் பொருந்தும் , வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை