பா.ஜ., - எம்.எல்.ஏ., வீட்டில் டிரைவர் திடீர் தற்கொலை
கதக்: சிரஹட்டி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி வீட்டில், அவரது கார் டிரைவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.கதக், சிரஹட்டி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி. இவரிடம் கார் டிரைவராக வேலை செய்தவர் சுனில் லமானி, 36. சந்துருவும், சுனிலும் உறவினர்கள் ஆவர்.கதக் டவுன் மல்லாடா காலனியில் உள்ள வீட்டில், நேற்று காலை சுனில் லமானி துாக்கில் தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த லட்சுமேஸ்வர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் சுனில் லமானி துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.என்ன காரணம் என்பது தெரியவில்லை. மரண கடிதம் எதுவும் சிக்கவில்லை. குடும்ப தகராறு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு எதுவும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.சுனில் தற்கொலை செய்த வீட்டை, சமீபத்தில் தான் சந்துரு லமானி வாங்கியதும் தெரியவந்துள்ளது. சந்துரு லமானி அரசு டாக்டராக இருந்தவர். தேர்தலில் போட்டியிடுவதற்காக பணியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.