உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருவனந்தபுரம் மேயர் தேர்தல்: பாஜ சார்பில் ராஜேஷ் போட்டி

திருவனந்தபுரம் மேயர் தேர்தல்: பாஜ சார்பில் ராஜேஷ் போட்டி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு நடக்கும் தேர்தலில் ராஜேஷை களமிறக்க பாஜ முடிவு செய்துள்ளது. துணை மேயர் பதவிக்கு ஆஷாநாத் போட்டியிட உள்ளார்.சமீபதத்தில் நடந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. கடந்த 4 தசாப்தங்களாக இடதுசாரிகள் ஆதிக்கம் நிறைந்த இந்த மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 50 இடங்களில் பாஜ., வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனையடுத்து பாஜவின் முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா மேயர் ஆக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவருக்கு மேயர் பதவியை வழங்க கட்சிக்குள் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, திருவனந்தபுரம் மேயர் பதவிக்கு வி.வி. ராஜேஷையும், துணை மேயர் பதவிக்கு ஆஷா நாத்தையும் போட்டியிடுவார்கள் என பாஜ பொதுச்செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவித்தார்.பாஜ மேலிட தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என மாநில தலைவர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மோகனசுந்தரம்
டிச 25, 2025 20:28

இங்கு அண்ணாமலைக்கு ஏற்பட்டது போல் அங்கே அந்த ஐஏஎஸ் அதிகாரி பெண்ணுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த பிஜேபியினர் கட்சியை தெற்கு மாநிலங்களில் வளர விட மாட்டார்கள்.


சமீபத்திய செய்தி