உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானா காங்., அமைச்சரவையில் அசாருதீனை சேர்க்க பா.ஜ., எதிர்ப்பு

தெலுங்கானா காங்., அமைச்சரவையில் அசாருதீனை சேர்க்க பா.ஜ., எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஆளும் காங்., - எம்.எல்.சி.,யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டனுமான முகமது அசாருதீனை, மாநில அமைச்சரவையில் சேர்க்க பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதிக்கு, நவ., 11ல் இடைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அம லில் உள்ளன. தெலுங்கானா காங்., செயல் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன், 62, மாநில மேல் சபை உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, தெலுங்கானா அமைச்சரவையில் அவர் இன்று சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அசாருதீனை, அமைச்சரவையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ., புகார் மனு அளித்துள்ளது. அதில், 'ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலில், முஸ்லிம் ஓட்டுகளை பெறவே அசாருதீனை அமைச்சரவையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண் டும்' என, குறிப்பிடப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rathna
அக் 31, 2025 15:53

சூதாட்டத்தில் பல கோடி சேர்த்த, உறுதி செய்யப்பட்ட மர்ம நபர். கான்கள் வோட்டு வங்கிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்கு காஷ்மீர் பண்டிட் படுகொலை, டெல்லி சீக்கியர் படுகொலை மிக பெரிய சாட்சி.


வாய்மையே வெல்லும்
அக் 31, 2025 11:50

வோட்டுக்கு எந்த லெவல் லேயும் இறங்கும் ட்ராவிடிய குடும்ப ஆசிபெற்ற காங்கிரஸ் இப்படி தான் செஞ்சு பிழைப்பு நடத்த வேண்டிய அவல நிலை.


GoK
அக் 31, 2025 11:24

துபைலிருந்து கைக்கடிகாரங்களை கடத்துவதில் மன்னன் இவன் ஒரு வேளை தெலிங்கனா அரசு கடிகார வியாபாரம் செய்ய குடும்பத்து இளவரசர் உத்திரவோ என்னவோ


Mr Krish Tamilnadu
அக் 31, 2025 10:50

எதிரிகள் கூட பரவாயில்லை. ஆனால் துரோகி? கேப்டன் ஆக இருந்து மேட்ச் பிக்சிங்? இன்னமும் அந்த மேட்ச் கண்முன்னே, மிடனில் சிம்பிள் கேட்ச் கொடுத்து அவுட். கமெண்ட்ரி, அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன், இப்படி ஒரு சாதாரண சாட் விளையாடுவர் என எதிர் பார்க்கவில்லை என்று.அந்த காலக்கட்டம் இந்தியர்கள் கிரிக்கெட் கனவுகளுடன் வாழ்ந்த காலம். அந்த சமயத்தில் அந்த துரோகம்?. மாறாத வடு.


duruvasar
அக் 31, 2025 10:01

சூதாட்ட கும்பலின் தலைவர். அமைச்சரானால் மாநிலத்தையே சூதாட்டத்தில் கட்டி விற்றுவிடுவார்.


Ramesh Sargam
அக் 31, 2025 09:21

அசாருதீன் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் இடம்பெற்ற ஒரு வீரர். அப்படிப்பட்டவரை அமைச்சரவையில் சேர்ப்பது மிகப்பெரிய தவறு. வேறு நேர்மையானவர்கள் உங்களிடம் இல்லையா?


Vasan
அக் 31, 2025 06:56

பிஜேபி இவ்வளவு விரைவில் விளையாட்டு வீரர்களையும் அவர்களது அங்கீகரிப்பையும் நிராகரிக்க கூடாது. திரு அஸாருதீன் அவர்களின் இந்திய கிரிக்கெட் அர்ப்பணிப்பு மகத்தானது. அவரது பேட்டிங் திறனாகட்டும், பீல்டிங் திறனாகட்டும், தலைமை திறனாகட்டும், அனைத்திலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர். அவரது வளர்ச்சியை விரும்பாத மும்பை சார்ந்த விளையாட்டு வீரர்கள் அவர் மீது சூதாட்ட புகார் ஏவி விட்டனர். அதையும் கடந்து அவர் இன்று மக்களுக்காக பணி செய்ய காத்திருக்கிறார். அதை பிஜேபி அரசியல் காரணங்களுக்காக தடுக்கிறது.


G Mahalingam
அக் 31, 2025 07:29

பாஜாக சொல்வது தேர்தல் முடிந்த பிறகு பதவி ஏற்று கொள்ளட்டும் என்றுதான் சொல்கிறார்கள்.


Keshavan.J
அக் 31, 2025 09:50

When he got caught in betting scandal congress was in power. Why he was punished. Sharad pawar was president of BCCI that time. He was banned after thorough investigation. BJP says let him be Minister after the election. What to do the intelligent level during dravidiya supporters is very low.


duruvasar
அக் 31, 2025 14:57

அப்படிங்கற. அப்போ எதுக்கு நான் சிறுபான்மை இனம் என்பதால் என் மீது குற்றம் சொல்கிறார்கள் என ஏன்


Field Marshal
அக் 31, 2025 06:53

அசாருதீன் ஒரு சமத்துவ விரும்பி ..இஸ்லாம் இந்து கிறிஸ்டியன் என்று மூன்று மதத்தில் திருமணம் செய்தவர்


Tetra
அக் 31, 2025 06:48

அறிவில்லாத ஹிந்துக்கள்


Priyan Vadanad
அக் 31, 2025 07:45

தவறான கருத்து.


SRIRAM
அக் 31, 2025 07:52

உண்மை தான் அறிவு மட்டும் இருந்தால் இங்கு இந்த கேவலமான தீய மு க கட்சியும், மேலே கான்கிராஸ் கட்சியும் இருந்திருக்காது, அது போல மத மாற்று வேலையும் இங்கு நடந்திருக்காது.....


Iyer
அக் 31, 2025 05:45

ஓட்டுக்காக "" DAWOOD IBRAHIM"" ஐ கூட ஆதரிக்கும் - காங்கிரஸ். கூடிய சீக்கிரம் காங்கிரஸ் ஐ முழுவதும் ஒழித்துக்கட்டவிட்டால் நாட்டுக்கு ஆபத்து.