உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள அரசை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கேரள அரசை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பாலக்காடு; கேரளாவை ஆளும் மா.கம்யூ., கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி அரசை கண்டித்தும், சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலக கோரியும், மாவட்ட சுகாதார துறை அலுவலகம் அருகில், பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தை, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் பிரசாந்த் சிவன் தலைமை வகித்தார். செயலாளர்களான ஓமனக்குட்டன், சண்முகம், ஸ்மிதேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக, ஆர்ப்பாட்ட பேரணியானது, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் துவங்கி, கோர்ட் ரோடு, கோட்டை மைதானம் வழியாக, சுகாதாரத்துறை அலுவலகம் உள்ள சிவில் ஸ்டேஷன் முன் வந்த போது, போலீசார் தடுப்பு அமைத்து, பா.ஜ.,வினரை தடுத்தனர். அங்கு, கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !