| ADDED : டிச 23, 2024 03:16 PM
புதுடில்லி; டில்லியில் குற்றப்பத்திரிகை என்ற பெயரில் ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி பா.ஜ., பிரசார கையேட்டை வெளியிட்டுள்ளது. டில்லி சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுகிறது. தனது 70 வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்துவிட்டது. தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v9upm707&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில், பா.ஜ., முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வெளியிடாமல் தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கி உள்ளது. ஓட்டுப்பதிவு தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் தலைநகர் டில்லி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி குற்றப்பத்திரிகை ஒன்றை பா.ஜ., வெளியிட்டு உள்ளது. அக்கட்சியின் மாஜி மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இதை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது; யமுனை நதியை ஆம் ஆத்மி அரசாங்கம் சீரழித்துள்ளது. மிகவும் துர்நாற்றத்துடன், அசுத்தமாக அந்த நதி காணப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது யமுனை நதியை தூய்மைப்படுத்துவதாக கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 10 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும், யமுனை நதி சுத்தப்படுத்தப்படவில்லை. அதற்கு கெஜ்ரிவாலுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் சரிவர கிடைப்பது இல்லை. அனைவருக்கும் சுகாதார குடிநீர் தரும், பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தை கெஜ்ரிவால் அனுமதிக்க மறுக்கிறார். கெஜ்ரிவாலின் ஊழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து டில்லியை காக்க வேண்டும். டில்லியை காக்க நாங்கள் திட்டமிடுவோம். அவரை மன்னிக்கவே மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ.,வின் இந்த பிரசாரத்துக்கு கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், மக்களிடம் என்ன சொல்வது என்ற எந்த திட்டமும் பா.ஜ.,விடம் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நிச்சயம் கூற வேண்டும். எதையும் செய்யாமல் தேர்தலை சந்திக்கின்றனர் என்று கூறினார்.