உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுவர் விளம்பர பிரசார இயக்கம் நாடு முழுதும் துவக்கியது பா.ஜ.,

சுவர் விளம்பர பிரசார இயக்கம் நாடு முழுதும் துவக்கியது பா.ஜ.,

புதுடில்லி :லோக்சபா தேர்தலையொட்டி பா.ஜ. சார்பில் சுவர் விளம்பர பிரசாரத்தை நேற்று புதுடில்லியில் அக்கட்சியின் தலைவர் நட்டா துவக்கி வைத்தார்.கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி பா.ஜ. காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் சுவர் விளம்பரங்களின் வாயிலாக வாக்காளர்களை கவர பா.ஜ. திட்டமிட்டுள்ளது. சுவர் விளம்பர பிரசார இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் நட்டா புதுடில்லியில் நேற்று துவக்கி வைத்தார்.அப்போது பேசிய அவர் ''வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.வை வரலாற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும். நம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வதுடன் உலக அரங்கில் நம் நாட்டின் மதிப்பை உயர்த்திய நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி அமைய பா.ஜ.வுக்கு ஓட்டளியுங்கள்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

krishnamurthy
ஜன 16, 2024 23:33

நல்ல செயல்


Kannan
ஜன 16, 2024 07:05

ஸ்வட்ச் பாரத்தை ஊக்குவிக்கும் BJP இவ்வாறு சுவர் விளம்பரத்தையும் சுவரொட்டிகளையும் தடை செய்ய வேண்டும்.


அப்புசாமி
ஜன 16, 2024 06:56

தூய்மை இந்தியா சூப்பரா போய்க்குட்டிருக்கு ஹைன்.


Ramesh Sargam
ஜன 16, 2024 06:43

அனுமதி பெற்று சுவர் விளம்பரங்கள் செய்யப்படவேண்டும்.


Vathsan
ஜன 16, 2024 11:48

நல்ல முட்டு கொடு


மேலும் செய்திகள்