உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த.வுக்கு தர பா.ஜ. முடிவு

பெங்களூரு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த.வுக்கு தர பா.ஜ. முடிவு

பெங்களூரு: இடைத்தேர்தல் நடக்கும் பெங்களூரு ஆசிரியர் தொகுதியை, ம.ஜ.த.,விற்கு விட்டு தர, பா.ஜ., முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகா சட்ட மேலவையில் பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் இருந்து பா.ஜ., சார்பில் எம்.எல்.சி.,யாக இருந்தவர் புட்டண்ணா. இவர் தனது பதவியை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார்.சட்டசபை தேர்தலில் ராஜாஜிநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். புட்டண்ணாவின் ராஜினாமாவால், பெங்களூரு ஆசிரியர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு, அடுத்த மாதம் 16ம் தேதி தேர்தல் நடக்கிறது.இந்நிலையில் இந்த தேர்தல் தொடர்பாக, பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள, முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டில் நேற்று, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் ஒன்றாக ஆலோசனை நடத்தினர். பா.ஜ., சார்பில் எடியூரப்பா, பெங்களூரு வடக்கு பா.ஜ., - எம்.பி., சதானந்த கவுடா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, முன்னாள் துணை முதல்வர்கள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா பங்கேற்றனர்.ம.ஜ.த., சார்பில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ஜி.டி.தேவகவுடா, பன்டேப்பா, நிகில் குமாரசாமி, எம்.எல்.சி., போஜேகவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனையின் போது பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு உட்பட்ட பெங்களூரு ரூரல், ராம்நகர் மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதால், அந்த தொகுதியை தங்களுக்கு விட்டு தரும்படி ம.ஜ.த., தலைவர்கள், பா.ஜ.,விடம் கேட்டு உள்ளனர்.இதற்கு பா.ஜ., தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, தங்கள் முடிவை தெரிவிப்பதாக ம.ஜ.த.,விடம் கூறி உள்ளனர். அனேகமாக அந்த தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுக்கொடுக்க, அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி