உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சல்லில் அனைத்து தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும்: அனுராக் தாக்கூர் கணிப்பு

ஹிமாச்சல்லில் அனைத்து தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும்: அனுராக் தாக்கூர் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: வரும் லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல் குழு கூட்டத்தை முன்னதாக நடத்த முடியவில்லை. தற்போது கூட்டம் நடந்துள்ளது. விரைவில் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள 4 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.4 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளிப்பது வழக்கம். சில சமயங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ