உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெரும்பான்மையை கடந்த பா.ஜ., கூட்டணி: நெருங்கி வருது இண்டியா கூட்டணி

பெரும்பான்மையை கடந்த பா.ஜ., கூட்டணி: நெருங்கி வருது இண்டியா கூட்டணி

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை எட்டு மணிக்கு துவங்கியது. தொடர்ந்து பா.ஜ., கூட்டணி முன்னிலை வகிக்கின்றன. பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை கடந்து 293 இடங்களில் பா.ஜ., கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இண்டியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பல தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருப்பதால், இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.நாடு முழுதும் கடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஏழு கட்ட லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் 543 தொகுதிகளில், தங்களுடைய எம்.பி.,யாக மக்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது இன்று தெரிய வரும். காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்து பா.ஜ., முன்னிலை வகித்து வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை கடந்து 293 இடங்களில் பா.ஜ., கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இண்டியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகள் 21 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பல தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருப்பதால், இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை