மேலும் செய்திகள்
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை: ஓவைஸி கண்டனம்
1 hour(s) ago | 2
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
5 hour(s) ago | 39
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
9 hour(s) ago | 4
லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதி, பா.ஜ., 'சீட்' தனது மகனுக்கு கிடைக்கும் என்று எலஹங்கா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் நம்பிக்கையில் இருந்தார். ஆனால், சிக்கபல்லாப்பூரை சேர்ந்த பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுதாகர், 'சீட்' கேட்டு உள்ளார்.சமீபத்தில் டில்லி சென்ற அவர், மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். சிக்கபல்லாப்பூரில் நான் தான் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். இதனால், கடுப்பான விஸ்வநாத், சுதாகரை விமர்சித்தார்.இந்நிலையில் சுதாகரின் ஆதரவாளர்களுக்கு, விஸ்வநாத் வலை விரிக்க ஆரம்பித்து உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருக்கும் விஸ்வநாத், சொந்த செலவில் சுதாகரின் ஆதரவாளர்களை திருப்பதிக்கு அழைத்து சென்று, ஏழுமலையானை தரிசனம் செய்ய வைக்கிறார். தினமும் 50 பேர் முதல் 60 பேரை, திருப்பதிக்கு அழைத்து செல்கிறார்.இதுபற்றி அறிந்த சுதாகர் கவலை அடைந்து உள்ளார். தனது ஆதரவாளர்களிடம், 'விஸ்வநாத்தின் ஆசைக்கு பலியாகி விடாதீர்கள்' என்றும் எச்சரித்து உள்ளார். வரும் நாட்களில் ம.ஜ.த., தொண்டர்களையும், திருப்பதிக்கு அழைத்து செல்ல, விஸ்வநாத் திட்டம் வைத்து உள்ளார்- நமது நிருபர் -.
1 hour(s) ago | 2
5 hour(s) ago | 39
9 hour(s) ago | 4