உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,

டில்லி சட்டசபை தேர்தல்: 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பா.ஜ.,

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கிறது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fopyjs6c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் தேசிய அளவில் 'இண்டியா' கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை இன்று எண்ணப்பட்டன.

வெற்றி நிலவரம்

பா.ஜ.,- 48 ஆம் ஆத்மி- 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தோற்ற தலைவர்கள்

டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, சத்யேந்திர ஜெயின், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்தனர். முதல்வர் அதிஷி மட்டும் போராடி வெற்றி பெற்றார்.

கெஜ்ரிவால் வாழ்த்து

இது தொடர்பாக கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பா.ஜ.,வுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஏராளமான பணிகளை செய்துள்ளோம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டும் செயல்படாமல், மக்களுடன் இருந்து அவர்களுக்காக பணியாற்றுவோம். இவ்வாறு அந்த வீடியோவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில்...!

2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. 67ல் அக்கட்சி வென்றது. வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Mediagoons
பிப் 08, 2025 23:38

ஆம் ஆத்மி தோற்றதால் பிரயாக்ராஜில் புனித நீரில் குளிக்காவிட்டாலும் இனி புனிதராகிவிடுவார்


Mediagoons
பிப் 08, 2025 23:36

காங்கிரசுடன் மோதியதால் ஏற்பட்ட விளைவு ஆம் ஆத்மிக்கு.


Mediagoons
பிப் 08, 2025 23:35

100 க்கு ரெண்டு பேர்தான் பாஜவுக்கு அதிகள் வாக்களித்துள்ளார்கள் .


Mediagoons
பிப் 08, 2025 23:33

உருட்டல் மிரட்டல்களால் பெற்ற வெற்றியெல்லாம் வெற்றியாகாது


Yes your honor
பிப் 09, 2025 08:14

அப்போ நீங்கள் ஈரோட்டில் வெற்றி பெற்றது செல்லாதா? இது சாப்ளினுக்கு தெரியுமா?


vijay,covai
பிப் 08, 2025 23:24

டில்லியில் சிறுபான்மையினர் இல்லையா


nv
பிப் 08, 2025 22:47

நான் ஒத்துக்க மாட்டேன்.. அண்ணா சுடலை, அம்மா மம்தா, நண்பா அகிலேஷ், உண்டியல் கம்யூனிஸ்ட் எல்லாம் ஓடி வாங்க, EVM ல எந்த பட்டன் அமுக்கினாலும் தாமரைக்கு போகுது!! நாளைக்கு பாராளுமன்றத்தில் கூவுங்க !!


Amar Akbar Antony
பிப் 08, 2025 22:25

நன்கு கவனியுங்கள் தோற்ற மூன்று தலைகள் கெஜ்ரி. சிசோடியா, ஜெயின் சிறையில் இருந்தவர்கள். மக்கள், டில்லி வாக்காளர்கள் உப்பை தின்று சூடும், சொரணையும் கொஞ்சம் நல்ல எண்ணம் உள்ளவர்கள் போல தோன்றுகிறது மூவருக்கும் வாக்கு அளிக்காமல் மண்ணை கவ்வ வைத்துவிட்டார்கள்.


Rajan A
பிப் 08, 2025 21:41

என்னே பெருந்தன்மை. இனிமேல் தான் ஊழல் கணக்கு வெளியே வரும். ஆனால் கெஜரி புத்திசாலி, பப்பு மண் குதிரைனு காட்டி விட்டார்


krishna
பிப் 08, 2025 20:40

VADAKKAN VADAKKAN ENA KELI SEYYUM EERA VENGAAYAM OOPIS 200 ROOVAA COOLIE THALA VAIKUNDESWARAN VENUGOPAL MURUGAN THAMIZHAN THANJAI MANNAR APPAVI OVIYA VIJAYAN PONDRA KOMAALIGALUKKU AVARGAL ARIVIL 5% KOODA ILLAI.ELLAM MURASOLI UBAYAM.


venugopal s
பிப் 08, 2025 20:01

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்!


krishna
பிப் 08, 2025 20:37

200 ROOVAA COOLIE KIDAITHAAL OOPIS KUMBALUKKU KONDAATTAM.ADODA OSI QUARTER KIDAITHAAL SUPEROO SUPER.ILLAYA EERA VENGAAYAM VENUGOPAL.


vadivelu
பிப் 08, 2025 21:55

அட்ல செப்பண்டி .இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ஊரு இரண்டு பட்டுதான் இருக்கணும். நாட்டுக்கு நல்லது நடக்கும்.


hari
பிப் 09, 2025 08:38

Erode திமுக வெற்றி எப்படித்தான் வேணு


பேசும் தமிழன்
பிப் 09, 2025 11:32

ஊர் இரண்டு பட்டதால் தான்.... உங்களால் 40 க்கு 40 வெற்றி பெற முடிந்தது.... இல்லையென்றால் இங்கே உங்கள் பருப்பு வேகாது.


முக்கிய வீடியோ