உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவுன்ட்டவுன் துவங்கிவிட்டது; அனைத்து தேர்தலிலும் தோல்வி தான்: மணிஷ் சிசோடியா சாடல்

கவுன்ட்டவுன் துவங்கிவிட்டது; அனைத்து தேர்தலிலும் தோல்வி தான்: மணிஷ் சிசோடியா சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பா.ஜ.,வின் கவுன்ட்டவுன் துவங்கிவிட்டது. அனைத்து மாநில தேர்தல்களிலும் தோல்வி அடையும்' என மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்தது. அதன்படி, அங்கு அக்டோபர் 1ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஹரியானாவில் அனைத்து தொகுதிகளிலும் சுயேச்சையாக ஆம்ஆத்மி போட்டியிடுகிறது.இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பேசியதாவது: பா.ஜ.,வின் கவுன்ட்டவுன் துவங்கிவிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடையும். மக்கள் தங்களை நிராகரித்து வருகின்றனர் என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ., தெரிந்து கொண்டது.

தோல்வி உறுதி!

வரும் நாட்களில் ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் புதுடில்லி தேர்தல்களில் பா.ஜ., தோல்வி அடைவது உறுதி. தேர்தல் தேதிகளை மாற்றுவதன் மூலம் வெற்றி பெற முடியாது.நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஹரியானாவில் பிரசாரம் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Arachi
செப் 01, 2024 21:20

மலையின் உச்சியில் ஏறியபிறகு இறங்கித் தான் ஆகவேண்டும். பாஜகவுக்கு இனி இறங்கும் முகம்தான். ஊர் சுத்தியது தான் மிச்சம். மணிப்பூர் இந்தியாவில் இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. வெறும் வெத்து வேட்டு.


Narayanan
செப் 02, 2024 15:35

கள்ளக்குறிச்சியும் பாண்டிச்சேரியும் இந்தியாவில் இருப்பதாக நீங்கள் உறுதியாக சொன்னால் மணிப்பூர் இந்தியாவில் இருப்பது உறுதி . ஏதோ பிஜேபி ஆல் மட்டுமே இந்த விவகாரம் எழவில்லை . ஆதிகாலம் தொடங்கி நடந்துவருகிற பிரச்சனை.


GMM
செப் 01, 2024 13:46

நீதி நல்லவருக்கு வழங்க வேண்டும். நயவஞ்சகருக்கு வழங்கினால், பாதிப்பு மக்களுக்கும், நீதிக்கும் தான். அரசின் விசாரணை அமைப்புகள் கருத்தை ஏற்காமல், அரசியல் சாயம் பூசி, குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவ விடுகிறது வழக்கறிஞர்கள் வாதம். ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆம் ஆத்மியுடன் சேர்ந்து பங்கு போட முடியும். எதற்கு தண்டிக்க போராட வேண்டும்? பணம் கைமாறிய தடயம் போதும். வெளி வந்தவுடன் அரசியல். பல மாதம் சிறை வைத்த நீதிமன்றம் பற்றி விமர்சனம் செய்ய மாட்டார். நீதி விசாரணையில் என்ன நடக்கிறது?


Muthuselvan
செப் 01, 2024 13:16

ஏன் உனக்கு பாஜக வெறுப்பு. தீவிரவாதம் என்றால் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். நீங்கள் யாரேனும் வியர்வை சிந்தியதுண்டா. எல்லாம் முதலாளி.


Sridhar
செப் 01, 2024 12:47

இவ்வளவு கொள்ளையடிச்சிட்டு 200 போனுக்கு மேல ஒடச்சு எறிஞ்சி ஆதாரத்தை அழிக்க முயற்சிபன்னிட்டு ஒரு வருசத்துக்கு மேல சிறை தண்டனையை அனுபவிச்சிட்டு சும்மா ஒரு பெயில் கிடைச்சவுடனே என்ன பேச்சு பாருங்க சீக்கிரமே கேச முடிச்சு உள்ள தள்ளுங்கப்பா இல்லன்னா நம்ம ஆ ராசா கணக்கா பேச ஆரம்பிப்பான்


Kumar Kumzi
செப் 01, 2024 12:23

உன்னை வெளியில் விட்டதே தவறு பப்பூ ஒரு லட்சம் ஓவா தருவேன்னு பொய் சொல்லி ஓட்டு கேட்டும் வெற்றி பெறலையே பிராடு


nizam
செப் 01, 2024 11:10

பல லட்சம் கோடி அதாணி க்கு கொடுத்தவர் தீவீரவாதியா நேர்மையான தில்லி நிர்வாகம் கொடுத்த சிசோடியா தீவிரவாதியா


Duruvesan
செப் 01, 2024 12:00

அதானிக்கு பல லக்சம் கோடி குடுத்தார்னு சொல்ற நீ உன்கிட்ட இருக்க evidence மொத்தம் குடு முடிஞ்சா, சிசோடியா கோர்ட்ல தண்டிக்க பட்டார்.


ஆரூர் ரங்
செப் 01, 2024 12:04

அப்போ INDI ஆளும் மாநிலங்களில் அடானி செய்துள்ள முதலீடுகளை வாபஸ்பெற உத்தரவிடலாமே.( ஆனா எங்க ஜெ ரட்சகர் ஏழை.தப்பே செய்யாதவரு. ரொம்ப நல்லவரு. நேர்மையானவர் கூட)


Kumar Kumzi
செப் 01, 2024 12:18

இதை விட கொடுமை இருக்க முடியுமா


Raman
செப் 01, 2024 21:16

wakeup from slumber.. you will never change


enkeyem
செப் 01, 2024 11:06

நீ ஒரு பக்கா பிராடு. பெரிய யோக்கியன் மாதிரி பீலா விடாதே. கவுண்ட் டவுன் பிஜேபிக்கு இல்ல. உங்க ஆம் ஆத்மீ கட்சிக்குத் தான்


Kasimani Baskaran
செப் 01, 2024 10:53

பொருளாதார தீவிரவாதிகள் கொட்டம் எல்லைமீறிப்போகிறது.


sankar
செப் 01, 2024 10:26

டெல்லியின் ஏழு தொகுதியில் தோற்றும் இன்னும் புத்தி வரவில்லை


விஜய்
செப் 01, 2024 10:09

ஏய் பிராடு


புதிய வீடியோ