உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரபரப்பான டில்லி தேர்தலில் பா.ஜ.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு

பரபரப்பான டில்லி தேர்தலில் பா.ஜ.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு

டில்லியில் பார்லிமென்டிற்கு அருகே உள்ளது, 'கான்ஸ் டிடியூஷன் கிளப்!' இதில் எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.,க்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். மிகவும் பவர் புல் கிளப் இது. இம்மாதம் 12ம் தேதி இந்த கிளப்பிற்கு தேர்தல் நடைபெற் றது. செயலர் பதவிக்கு, பா.ஜ.,வின ருக்குள்ளே மோதல். பா.ஜ., - எம். பி., ராஜிவ் பிரதாப் ரூடியும், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான, சஞ்சீவ் பால்யான் போட்டியிட்டனர்.இந்த கிளப்பில், 1,295 உறுப்பினர் கள் உள்ளனர். சட்டசபை தேர்தல் போல, இங்கு தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. ரூடி, தாக்கூர் சமூகத் தைச் சார்ந்தவர். சஞ்சய் பால்யான் உ.பி., மாநிலத்தின் ஜாட் இனத்தைச் சார்ந்தவர். இதனால், இந்த சாதாரண கிளப் தேர்தலிலும் ஜாதி அரசியல் விளையாடியது.மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, காங்கிரசின் சோனியா உட்பட பல வி.ஐ.பி.,க்கள் ஓட்டளித்தனர். கடை சியில், ராஜிவ் பிரதாப் ரூடி, சக கட்சியினரான சஞ்சீவை, 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ரூடியின் வெற்றி, டில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூடியை பா.ஜ., தலைவர் களுக்கு குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பிடிக்காது. இதனால், அமித் ஷா உட்பட பல சீனியர் அமைச் சர்கள், ரூடிக்கு எதிராக வேலை செய்தனர்.அதே சமயம் சோனியா உட்பட பல காங்., மற்றும் 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் ரூடிக்கு ஆதரவாக செயல்பட்டு, அவருக்கு ஓட்டளித்தனர்; சில பா.ஜ., எம்.பி.,க்களும் ரூடிக்கு ஆதரவளித்தனர். 'தேர்தல் முடிவு அமித் ஷாவிற்கு பெரும் பின்ன டைவு. இது, அமித் ஷாவின் தோல்வி' என்கின்றனர் சில பா.ஜ., - எம்.பி.,க்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K V Ramadoss
ஆக 17, 2025 16:40

கான்ஸ்டிடூஷன் கிளப் என்பது அறிவுப்பூர்வமாக அரசியலை ஆய்வுசெய்வதற்காக ஏற்பட்ட ஒரு ஸ்தாபனம். இதன் செயல் உபயோகமாக இருக்கவேண்டும் என்றால் இதற்குள் அரசியல் புகக்கூடாது. அரசியல் கடசி சார்புடையதாக இருக்கக்கூடாது. இதற்குள் நடக்கும் தேர்தல் போன்றவற்றிற்கு அரசியல் கட்ச்சிகளின் அழுத்தம் இருக்கக்கூடாது. அவரவர்கள் தன் விருப்பத்திற்கு, அறிவிற்கு ஏற்றபடி சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஒரே கட்சியை சேர்ந்த இருவர் போட்டியிட்டால் தவறில்லை. இதனால் மக்களுக்கு நேரிடையாக எந்த பயனும் கிடையாது. பாதகமும் கிடையாது.


Rajasekar Jayaraman
ஆக 17, 2025 14:04

இதுல என்ன தவறு இருவரும் ஒரே கட்சி இதில் என்ன பின்னடைவு


venugopal s
ஆக 17, 2025 13:37

தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் நடந்திருந்தால் நிச்சயமாக பாஜக தான் ஜெயித்து இருக்கும்!


தஞ்சை மன்னர்
ஆக 17, 2025 13:06

ஹி ஹி ஜெயித்தது என்னமோ பி சே பி தானே


Thravisham
ஆக 17, 2025 14:45

இதென்ன கட்சியா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 17, 2025 12:16

இந்த தேர்தலால் விளையப்போகும் நன்மைகளை யாராவது சொன்னால் நல்லது


சத்யநாராயணன்
ஆக 17, 2025 09:44

எம்பிகளாக தேர்வாகும் அனைவரும் தேசப்பற்றோ அல்லது அறிவு முதிர்ச்சியோ உடையவர்கள் என்று கணிக்கலாகாது அமித்ஷா அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தேச நலனை முன்னிறுத்தியே இருக்கிறது இது இப்போது அத்தியாவசியமாகும் மேலும் எம்பிக்களாக இருப்பவர்கள் தனது பதவி நலனுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்


Mario
ஆக 17, 2025 09:29

கள்ள வோட்டு போட முடியலையா பிஜேபிக்கு


SANKAR
ஆக 17, 2025 09:47

only in parliament and state elections....last attempt chandigarh mayor election.too blatant and open


ராஜாராம்,நத்தம்
ஆக 17, 2025 09:47

உன்னைப் போன்ற திருட்டு திராவிட களவானிகள்தான் கள்ள ஓட்டு போடுவதில் எக்ஸ்பர்ட் அவர்களுக்கு அதெல்லாம் பழக்கமில்லை...


Shivakumar
ஆக 17, 2025 10:23

தேர்தல் ஆணையம், இண்டி கூட்டணி தலைவர்களை நேரடியாக சந்திக்க அழைப்பு விடுத்தது. அதிக பட்சமாக, 30 பேர் அடங்கிய குழு வர அனுமதி அளித்தது. ஆணையம். சந்திக்க வருகிறோம் என, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப்பினார் விரைவில் யார் யார் பங்கேற்பர் என்ற பட்டியலை அனுப்புவதாகவும் கூறினார் ஜெய்ராம் ரமேஷ். ஆனால், கடைசி வரை அந்த பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படவே இல்லை இதனால் தேர்தல் ஆணையம் -இண்டி கூட்டணி கூட்டம் நடைபெறவே இல்லை. இப்ப ஏன்டா தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு போகல


vivek
ஆக 17, 2025 11:13

மணிப்பூர் முட்டுச்சந்து


vivek
ஆக 17, 2025 11:14

so what do you want to say sankar


nagendhiran
ஆக 17, 2025 11:36

உன்ன மாதிரி தற்குறிகள்தான் பப்புவின் குறியே?


Nagarajan D
ஆக 17, 2025 12:14

மதமாறியவனுக்கு தேசத்தை பற்றியோ தேச நலன் பற்றியோ எப்படி தெரியும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை