உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழிக்குப்பழி...? ஓநாய் தாக்குதலின் திகில் பின்னணி; உ.பி., அதிகாரி அதிர்ச்சி தகவல்

பழிக்குப்பழி...? ஓநாய் தாக்குதலின் திகில் பின்னணி; உ.பி., அதிகாரி அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மக்களை வேட்டையாடும் ஓநாய்களின் தாக்குதல் குறித்து வனத்துறையினர் வெளியிட்ட தகவல், அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அச்சுறுத்தல்

உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில், சமீப காலமாக ஓநாய்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள 35 கிராமங்களில் மக்கள் பீதியில் உள்ளனர். ஓநாய்கள் தாக்குதலில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பரேஷன் பேடியா

இதையடுத்து, ஓநாய்களை பிடிக்க, 'ஆப்பரேஷன் பேடியா' என்ற பெயரில் அதிரடி தேடுதல் வேட்டை நடக்கிறது. இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்ட நிலையில், மீதமுள்ளவற்றை பிடிக்க வனத்துறையினர் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

வங்கு

இதனிடையே, பஹ்ரைச் மாவட்டத்தின் ராமப்பூர் கிராம கரும்புக்காட்டில் உள்ள 2 அடி ஆழமுள்ள வங்கில் 2 ஓநாய் குட்டிகள் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டன. கனமழை காரணமாக, வங்கு தண்ணீரில் மூழ்கியதில் குட்டிகள் செத்துப்போய் விட்டன.

பழிக்குப்பழி

இதனால், தவித்துப் போன தாய் ஓநாய்கள், தங்களின் குட்டிகளும், இருப்பிடமும் பறிபோனதற்கு மனிதர்களே காரணம் என்று நினைத்து, பழிவாங்கும் நோக்கில் மக்களை வேட்டையாடி வருவதாக உ.பி., வனத்துறை அதிகாரி சஞ்சய் பதக் தெரிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 'ஓநாய்களுக்கு பழி வாங்கும் குணம் உண்டு. தங்களுக்கு இன்னல் விளைவிப்பவர்களை அவை பழிவாங்கும் குணம் கொண்டவை. தற்போதைய சம்பவங்களின் பின்னணியில் அது போன்ற காரணமும் இருக்கலாம்' என்று அவர் கூறியுள்ளார்.அச்சுறுத்தி வரும் ஓநாய்களை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

theruvasagan
செப் 06, 2024 14:05

ஏரி கண்மாய் குளம் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி அங்கு கட்டின குடியிருப்புகளில் மழைக் காலத்தில் வெள்ளம் வந்து மூழ்கும்போது இயற்கையின் பழிவாங்கல் என்று நாம் சொல்லுவோம். அதை ஒத்துக்கொள்ளாமல் மூடநம்பிக்கை என்பான் பகுத்தறிவு திராவிடன்.


Lion Drsekar
செப் 06, 2024 11:04

ஓநாய்க்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல் சமூக விரோதிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும், தீய நோக்குடன் திரியும் மனிதனைவிட காட்டு விலங்குகள் எவ்வளவோ மேல், இதுவாது கடிக்கறது , ஆனால் மனித மிருகங்கள் மனிதனை சீரழிப்பதை அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கிறோம், வந்தே மாதரம்


venugopal s
செப் 06, 2024 10:49

எந்த மிருகத்துக்கும் பழி வாங்கும் அளவுக்கு அறிவு கிடையாது என்பது தான் உண்மை.இது மூட நம்பிக்கையின் மற்றொரு உச்சம்!


Ganesun Iyer
செப் 06, 2024 11:22

மனித மிருகத்துக்கு கூடவா.. மனிதனும் ஆதியில் மிருகம்தான்...


RAMAKRISHNAN NATESAN
செப் 06, 2024 12:35

திமுக விதிவிலக்கு .......


சாண்டில்யன்
செப் 06, 2024 22:52

சாரி தங்கள் கருத்து சரியல்ல யானை பாம்பு பற்றி நன்கு விசாரித்து தெரிந்து கொள்ளவும் "யானை கல்லடக்கினது போல" என்று ஒரு பழமொழி உண்டு


ram
செப் 06, 2024 10:49

இது UTTERPRADESH , இங்கு இருக்கும் திருட்டு திராவிட ஆட்கள் இதை பத்தி எழுத ஆரம்பித்து விடுவார்கள்.


SRIRAMA ANU
செப் 06, 2024 09:37

அது எப்படி உங்களுக்கு ஏற்றார் போல் புதுப்புது வகையான யோசனைகள் எல்லாம் வருகிறது. கேவலம் மிக கேவலம்...... நீங்கள் எல்லாம் ஆட்சி செய்வதற்கு தகுதியற்ற ஜென்மங்கள்....


sridhar
செப் 06, 2024 10:41

ஆமாம் , பெண்கள் கற்பை வேட்டை ஆடும் மம்தா அரசு தான் நல்ல அரசு , அட வெட்கம் கெட்டவங்களே .


Ganesun Iyer
செப் 06, 2024 11:29

நீட்டுனால சாதாரண மாணவனிடம் பணம் கொள்ளையடிக்கு முடியாதுன்னு தெரிஞ்சு எதிர்க்குக்கும் திராவிடிய ஆட்ச்சியை விடவா?


N.Purushothaman
செப் 06, 2024 09:01

பொதுவாக காட்டு விலங்குகள் பழிக்கு பழி வாங்கும் குணாதிசயங்கள் கொண்டவையே ....அதுவும் ஓநாய்கள் கும்பலாக வருபவை ...


Indian
செப் 06, 2024 08:48

ஓநாயை விட மோசமான மிருகம் மனிதன் .


Muralidharan raghavan
செப் 06, 2024 09:56

முற்றிலும் உண்மை


Rajathi Rajan
செப் 06, 2024 11:15

ஓநாயை விட மோசமான மிருகம் இங்கு வந்து கருத்து என்னும் பெயரில் வன்மம் கக்கும் சங்கிகள்.. மற்றும் அதுக்கு துணை போகும் நமது சங்கியும்,, இது வரும் ஆனா வராது


Indian
செப் 06, 2024 17:47

நீயே ஒரு மிருகத்தை விட கேடுகெட்ட மிருகம் .