தங்கவயல் அருகே உறைவிட பள்ளி
தங்கவயல் : ''கேசம்பள்ளி அருகே, மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி கட்டப்படும்,'' என, தங்கவயல் காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.தங்கவயலில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடக அரசு மேலும் 20 மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதில் ஒன்று, தங்கவயல் தொகுதியில் அமைக்கப்படுகிறது.தங்கவயலில் சுமதி நகரில் ஒன்றும், பேத்தமங்களா அருகே உள்ள சிகரபுராவில் ஒன்றும் ஏற்கனவே உள்ளது. மாநிலத்தின் முதல் முதல்வர் கே.சி.ரெட்டி பிறந்த சொந்த கிராமமான கேசம்பள்ளி மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. எனவே, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய, கேசம்பள்ளி அருகே உள்ள மஜ்ரா குட்டஹள்ளியில் 8 ஏக்கரில் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி அமைகிறது. இது, கே.சி.ரெட்டி நினைவாக உருவாக்கப்படுகிறது. இது எனது கனவு திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.