வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த புரளி கிளப்புவர்களுக்கு தண்டனை மிக மிக கடினமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தண்டனையை டிவியில் ஒளிபரப்பவேண்டும். அதைப்பார்த்தாவது மற்ற புரளி கிளப்ப எண்ணம் கொண்டவர்கள் அடங்குவார்கள்.
புதுடில்லி: டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று டில்லி விமானநிலையத்தின் 3வது முனையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்ட பேப்பர் ஒன்றை பணியாளர் ஒருவர் எடுத்துள்ளார். இதையடுத்து, டில்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில், வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த புரளி கிளப்புவர்களுக்கு தண்டனை மிக மிக கடினமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தண்டனையை டிவியில் ஒளிபரப்பவேண்டும். அதைப்பார்த்தாவது மற்ற புரளி கிளப்ப எண்ணம் கொண்டவர்கள் அடங்குவார்கள்.