உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்றும் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை, கோவைக்கும் வந்தது

இன்றும் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை, கோவைக்கும் வந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்றும் 70 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த சில நாட்களாக இந்தியாவில் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் இன்றும் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பல்வேறு நகரங்கள் இடையே மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.ஏர்விஸ்தாரா, இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களின்தலா 20 விமானங்களுக்கும், ஆகாசா ஏர் நிறுவனத்தின் 14 விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதுடன், வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம்'' என தெரிவித்து உள்ளது.இதனுடன் சேர்த்து, கடந்த 11 நாட்களில் மட்டும் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

சென்னையில்

சென்னையில்3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பகல் 12 :30 மணியளவில், 3 விமான நிறுவனங்களுக்கு அந்த மிரட்டல் அனுப்பப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் இருந்து வரும் ஏர் இந்தியா ஜெய்ப்பூரில் இருந்து வரும் இண்டிகோசென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ஆகாசா ஏர் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை

கோவை விமான நிலையத்தில் விஸ்தாரா நிறுவனத்தின் இரண்டு விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.மும்பை - கோவைடில்லி - கோவை இடையே இயக்கப்படும் விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 24, 2024 20:01

சாணக்கியரின் உள்துறை விசாரித்துவிட்டதா ????


ngm
அக் 25, 2024 07:40

ஆமா எல்லாரும் உன்னை போல 200 ரூவா வூஃபீஸ் பிளஸ் ஓசி குவார்ட்டர்ன்னு கண்டுபிடிப்பு.


Ramesh Sargam
அக் 24, 2024 19:55

காலிஸ்தான் தீவிரவாதிகள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் நம் நாட்டில் உள்ள தேசதுரோக வியாதிகள் விடுக்கும் மிரட்டல்கள்தான் இவை. அனைவரையும் கூண்டோடு ஒழிக்கவேண்டும். என்கவுண்டர்.


Sivagiri
அக் 24, 2024 19:46

எல்லா பிளைட்டையும் , கிளம்பும் போதே போலீஸ் வச்சு , தெளிவா செக் பண்ணிட்டு கிளம்பனும் , அதுக்கு கொஞ்சம் காசு செலவு பண்ணனும் , பாதி தூரம் போனப்புறம் இறக்கி செக் பண்ணா ? . .


ஷாலினி
அக் 24, 2024 19:30

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது.


ஆனந்த்
அக் 24, 2024 18:34

இதற்கு எப்போது முடிவு கட்டப்படும். இது போன்று மிரட்டல் விடுப்பதால் பயணிகள் மட்டுமின்றி அவர்களின் உறவினர்களும் நிம்மதிஇழந்து தவிக்கின்றனர். யாரையோ பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இதுபோன்று புரளி கிளப்பிவிடும் மூடர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை