எல்லை பாதுகாப்பு படையினர் குவிப்பு
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக தேசிய தலைநகர் டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கியமான பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு படையினரும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.