உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விதான்சவுதா கார்டனில் பீர் பாட்டில்

விதான்சவுதா கார்டனில் பீர் பாட்டில்

பெங்களூரு: விதான்சவுதா கார்டனில், பீர் பாட்டில் கிடந்தது. போலீசாரின் கண்களை மறைத்து, மது பாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.அனைத்து அரசு அலுவலகத்திலும், வளாகத்திலும் சிகரெட் புகைக்க, குட்கா, பான் மசாலா உட்பட, புகையிலை பொருட்களை உட்கொள்ள தடை விதித்து, நேற்று முன் தினம் அரசு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நேற்று பெங்களூரு, விதான்சவுதாவின் மேற்கு நுழைவு வாயில் கார்டனில், காலியான பீர் பாட்டில் கிடந்தது. போலீசாரின் கண்களை மறைத்து, கார்டனுக்குள் பீர் பாட்டிலை கொண்டு வந்து, அருந்திவிட்டு பாட்டிலை அங்கு வீசிச் சென்றுள்ளனர்.பீர் பாட்டில் கிடக்கும் படம், சமூக வலைதளத்தில் பரவியது. அரசின் உத்தரவுக்கு மதிப்பில்லையா என, பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 09, 2024 12:52

நான் நேற்றே கேட்டேன், புகை பிடிக்க தடை செய்யும் அரசு, அந்த தடை பொதுமக்களுக்கு மட்டும்தானா, அல்லது அமைச்சர்களுக்கும் உண்டா என்று. ஏன் என்றால், ஒரு சில அமைச்சர்களும் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்கள். இப்பொழுது விதானசவுதா கார்டன் உள்ளேயே பீர் பாட்டில்... இப்ப அரசு குடிக்க தடை விதிக்குமா, அல்லது பூரண மதுவிலக்கு அறிவிக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை