வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாய்ப்பிரியர்கள் எங்கே? அந்த சிறுவனின் மருத்துவ செலவை அவர்கள் ஏற்கவேண்டும். மறுத்தால் சிறை தண்டனை.
புதுடில்லி:கிழக்கு டில்லியில் உள்ள ஷாகர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன், 5 வயது மகனுடன், அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் தன் உறவினரை பார்ப்பதற்காக வந்தார். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த ஒரு தெருநாய், சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியது. சிறுவனின் தந்தை மீதும் பாய்ந்தது. சிறுவனின் அழுகுரல் கேட்டதும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து நாயை விரட்டி அடித்தனர். அதற்குள் அந்த நாய், சிறுவனை பலமுறை கடித்து விட்டது. படுகாயங்களுடன் அந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு காயம் பலமாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
நாய்ப்பிரியர்கள் எங்கே? அந்த சிறுவனின் மருத்துவ செலவை அவர்கள் ஏற்கவேண்டும். மறுத்தால் சிறை தண்டனை.