உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடையை மீறி : சம்பல் பகுதிக்கு ராகுல், பிரியங்கா இன்று வருகை

தடையை மீறி : சம்பல் பகுதிக்கு ராகுல், பிரியங்கா இன்று வருகை

சம்பல்; உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதிக்கு ராகுல்,பிரியங்கா வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரப்பிரதேசம் சம்பல் நகரில் உள்ள மசூதியில் கோர்ட் உத்தரவின் பேரில், தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால் பதற்றம் அதிகரித்து, மோதல் வன்முறையாக வெடித்தது. இச்சம்பவங்களில் 5 பேர் பலியாயினர் 30 போலீசார் காயம் அடைந்தனர்.தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் 24 மணிநேரமும் போலீசார் கட்டுப்பாட்டின் கீழ் சம்பல் நகரம் கொண்டு வரப்பட்டது. சம்பல் விவகாரம் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.இந்நிலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வயநாடு லோக்சபா எம்.பி. பிரியங்கா ஆகியோர் கலவரம் பாதித்த சம்பல் பகுதிக்கு இன்று (டிச.04) வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு சம்பல் மாவட்டம் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அனுமதி இல்லை எனவே சம்பல் பகுதிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

sundarsvpr
டிச 05, 2024 10:30

சட்டம் விதியை மதிக்கவேண்டும். ராகுல் பிரியங்கா தற்போது எதிர்க்கட்சியின் தலைவர். பிரதம மந்திரி இல்லை. பிரதம மந்திரியாய் இருந்தாலும் விதியை மீறமுடியாது. விதி பொதுவானது. இது சரியாய் இருக்காது. ராகுல் போன்றோர் தவறு செய்தால் தண்டனை உயர்வாய் இருக்கவேண்டும். பொது மக்களைவிட அரசு பலன்கள் அனுபவிக்கின்றனர்.


Rajkumar Ramamoorthy
டிச 04, 2024 13:09

நீங்கள் அரசியலுக்கு புதுசா இல்ல காங்கிரஸ் செய்த அட்டூழியம் தெரியாதா ?


Barakat Ali
டிச 04, 2024 12:09

அண்ணன் & தங்கையின் மறைமுக அஜெண்டா ஹிந்து வாக்குகளை ஒன்றுபடுத்துதல் ......


AMLA ASOKAN
டிச 04, 2024 11:54

இந்த இரண்டு பேரை கண்டு ஏன் இவ்வளவு எரிச்சல் , பதட்டம் , வெறுப்பு ? 1947 TO 1990 வரை நேரு குடும்பத்தின் ஆட்சியில் இந்தியா அடைந்த மாபெரும் வளர்ச்சியின் அஸ்திவாரத்தில் இன்றைய இந்தியா முன்னேறி வருகிறது . உலக சரித்திரதில் அவர்கள் இடம் பெற்றுவிட்டார்கள் . இன்றைய விமர்சனங்கள் அனைத்தும் பொறாமை & இயலாமை .


Dharmavaan
டிச 04, 2024 19:44

நாட்டை குட்டிச்சுவராக்கியதுதான் நேரு குடும்ப பெருமை


Anand
டிச 04, 2024 10:18

இவர்கள் செல்லும் இடம் விளங்காமல் போகும்.


rajan
டிச 04, 2024 10:44

இப்போ உபி ரொம்ப விளங்கி இருக்கு


HoneyBee
டிச 04, 2024 10:04

இந்தியா இறையாண்மையை மதிக்க தெரியாத ஜென்மங்கள்...


Nallavan
டிச 04, 2024 10:01

இவர்கள் இந்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இவர்கள் பிரச்னை உள்ள சாம்பல் பகுதிக்கு பார்வையிட செல்கிறார்கள், இவர்களை தடுக்க UP மணிலா அரசால் தடை விதிக்க முடியாது, இதை புரியாத தமிநாட்டு சில நண்பர்கள் சீமான் பாஷயில் சங்கிகள் உளறுவது சிரிப்பாக இருக்கிறது


orange தமிழன்
டிச 04, 2024 09:45

சரி.....இங்கு புயல் பாதிக்கபட்ட இடங்களுக்கு வாருங்கள்.....வந்து உங்கள் சேவையை செய்யுங்கள்.....


vijay
டிச 04, 2024 08:51

இரண்டு தத்திகள் ஒண்ணா சேர்ந்துடுச்சு


வாய்மையே வெல்லும்
டிச 04, 2024 08:48

தண்டனைக்கு தப்பிக்க பெயிலில் விட்டால் என்னென்ன மொள்ளமாரித்தனம் செய்ய முடியுமோ அம்புட்டும் செய்வாரு ராவுளு. ராவுல் பிரியங்கா மதக்கலவரம் செய்து அரசியல் பிழைப்பு நடத்துவதே முழுநேர வேலை .