உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சீன விசாவுக்கு லஞ்சம்: காங்., எம்.பி., கார்த்திக்கு சிக்கல்

 சீன விசாவுக்கு லஞ்சம்: காங்., எம்.பி., கார்த்திக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீன விசா பணமோசடி வழக்கில், காங்., - எம்.பி., கார்த்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டில்லி சி.பி.ஐ., நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 'வேதாந்தா' குழுமத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி.எல்., நிறுவனம், கடந்த 2011ல் பஞ்சாபில் அனல்மின் நிலையம் அமைத்தது. இந்த பணிகளுக்காக, சீன ஊழியர்கள் 263 பேருக்கு விதிமீறி விசா வாங்க முயன்றது. இதற்காக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தியை அணுகியதாக கூறப்படுகிறது. அவருக்கு நெருக்கமாக இருந்த பாஸ்கரராமன் என்பவர் மூலம், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, சீன ஊழியர்களுக்கு விசா பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, 2020ல் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., கடந்த 2022ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், தற்போதைய சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, அவரது உதவியாளர் பாஸ்கரராமன், விரால் மேத்தா, அனுப் அகர்வால், மன்சூர் சித்திக் மற்றும் சேத்தன் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது பெயர்கள் சேர்க்கப் பட்டன. இந்நிலையில், இவ்வழக்கு டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி மற்றும் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் இருந்து சேத்தன் ஸ்ரீவஸ்தவா மட்டும் விடுவிக்கப்பட்டார். ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளில், கார்த்தி மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சீன விசா பணமோசடி வழக்கிலும் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

G Mahalingam
டிச 24, 2025 08:59

திறமையான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். வழக்கை தள்ளி போடுவதற்கு என்றும் சில வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் என்ன கொள்ளை அடித்த பணம் வழக்கறிஞர்களுக்கு 90 சதவீதம் போய்விடும்.


RAAJ68
டிச 24, 2025 08:30

ஒரு சிக்கலும் வராது ஏர்செல் ஐ என் எக்ஸ் மீடியா வழக்குகள் பல வருடங்களாக நிலுவையில் உள்ளன எனவே இன்னும் 25 வருடங்கள் ஆனாலும் தீர்ப்பு வராது அதற்கு இவர்களின் ஆயுள் காலம் முடிந்து விடும்


KALIDASAN
டிச 24, 2025 06:35

என்ன சிக்கல் வரப்போகுது , வழக்கு பதிவு செய்யவே 15 வருடம் ஆயிபோச்சு , வழக்கு முடிவுக்கு வர 25 வருஷம் ஆயிடும்


Perumal Pillai
டிச 24, 2025 06:27

ஒன்றும் நடக்காது . தமிழ்நாட்டு அரசியல்வாதியை தண்டிக்க சட்டத்தில் இடம் கிடையாது. 2ஜி , டாஸ்மாக், KN நேரு , விஷயத்திலே இதை பார்த்து விட்டோம்.


naranam
டிச 24, 2025 06:21

இவர்கள் வழக்கு நடத்திக் கிழித்தார்கள். 2011 நடந்த குற்றத்திற்கு இன்னும் குற்றச்சாட்டுக் கூட பதியப் படவில்லை.. நம் நாட்டில் இப்படி வழக்கை இழுத்தடித்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்கு முக்கிய காரணமே இந்த நீதி மன்றங்கள் தான்..


மேலும் செய்திகள்





புதிய வீடியோ