உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் டாக்டர் குடும்பத்துக்கு லஞ்சமா: அவமானப்படுத்தும் முயற்சி என்கிறார் மம்தா

பெண் டாக்டர் குடும்பத்துக்கு லஞ்சமா: அவமானப்படுத்தும் முயற்சி என்கிறார் மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் டாக்டரின் குடும்பத்திற்கு கோல்கட்டா போலீசார் பணம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்து உள்ளார்.பெண் டாக்டரின் பெற்றோர் கூறுகையில், ஆரம்பம் முதலே போலீசார் வழக்கை சரியாக கையாளவில்லை. மகளின் உடலை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. பிறகு எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது, போலீஸ் உயர் அதிகாரி மூலம் எங்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தனர் என குற்றம் சாட்டினர்.இதற்கு பதிலளித்த மம்தா கூறுகையில், அவர்களுக்கு போலீசார் மூலம் பணம் கொடுக்க முயற்சி ஏதும் செய்யவில்லை. இது மே.வங்கத்தை அவமானப்படுத்த நடக்கும் முயற்சி ஆகும். பணம் கொடுத்து ஒருவரின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. மகளின் நினைவாக அவர்கள் ஏதும் செய்ய விரும்பினால், அவர்கள் எங்களை நாடலாம். அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.சம்பவம் நடந்ததும் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், துர்கா பூஜை காரணமாக சட்டம் ஒழுங்கு பற்றி நன்கு தெரிந்த ஒருவர் பதவியில் இருந்தால் அது நன்றாக இருக்கும் எனக்கருதி அதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

xyzabc
செப் 09, 2024 22:41

நாட்டிற்கு சாபக்கேடு. திராவிட mp க்கள் அடக்க கூடிய பிசாசு .


Ramesh Sargam
செப் 09, 2024 21:30

மமதா ஏதோ பேசி விவகாரத்தை திசைதிருப்ப பார்க்கிறார்.


M Ramachandran
செப் 09, 2024 19:48

பலே பெண்மணி. செய்வதெல்லாம் செய்து விட்டு டிராமா வேரைய்யா? சிபிஐ இந்த பெண்மணியின் பின்புலத்தை ஆராய வேண்டும்.


sankaranarayanan
செப் 09, 2024 18:30

துர்கா பூஜை காரணமாக அல்லவே அல்ல மம்தாவின் ஆட்டுழிய பூஜைக்காத்தான் அவரது ராஜினாமா ஏற்கபடவில்லை


GMM
செப் 09, 2024 18:28

பெண் டாக்டர் கொலையில் அதிக அதிகார வர்க்கம் நீதி, தர்மத்தை அவமான படுத்தி விட்டது போன்ற உணர்வு . ஜனநாயகத்தில் சர்வாதிகாரம் பண்ண முடியும் என்பதன் அடையாளம் .


Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 17:53

திதி கூட கூட்டணியை? பங்களாதேஷ் நவமி லீக் & bnp வைத்துக்கொள்ளக்கூடும்


rsudarsan lic
செப் 09, 2024 17:16

சிபிஐ இப்போது பேப்பர் மேய்ந்து கொண்டிருக்கிறது அசை போட்டு விட்டு 1000 பக்க ரிப்போர்ட் தாக்கல் செய்யும் அப்புறம் கதை எங்கெங்கேயோ போகும். இதுக்குள்ள மத்திய அல்லது மேற்கு வங்க தேர்தல் வரும். மோடியும் தீதியும் கூட்டணி வைத்து கொள்வார்கள் தலைமை நீதிபதி ஓய்வு பெறுவார். பெண்ணுக்கு நீதி? புடலங்காய்


Srinivasan K
செப் 09, 2024 20:27

you are trying to save this mamta. she will loose power anyway indi alliance will never win at Central level


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை