உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் விமானத்தை கழற்றி எடுத்துச்செல்ல பிரிட்டன் முடிவு

போர் விமானத்தை கழற்றி எடுத்துச்செல்ல பிரிட்டன் முடிவு

திருவனந்தபுரம்: எரிபொருள் பற்றாக்குறையால் கேரளாவின் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் பழுதானதால், அதை கழற்றி எடுத்துச் செல்ல பிரிட்டன் விமானப் படை முடிவு செய்து உள்ளது.வளைகுடா பிராந்தியத்தின் அமைதியின்மை மற்றும் கடற்கொள்ளையர் கண்காணிப்புக்காக, பிரிட்டன் போர்க்கப்பல் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டன. அதில் இருந்து கடற்படையைச் சேர்ந்த 'எப் - 35பி' போர் விமானம் ஜூன் 14 அன்று எரிபொருள் பற்றாக்குறையால், கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து அனுமதி பெற்றனர். பாதுகாப்பு சரிபார்ப்புகள் முடிந்த பின், விமானம் மீண்டும் ரோந்து கப்பலை அடைய அனுமதிக்கப்பட்டது. அப்போது ஹைட்ராலிக் பழுதானது தெரிந்தது.அதை சரி செய்ய மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட ஒரு சிறிய ராயல் கடற்படை குழு திருவனந்தபுரம் வந்தது. ஆனால், கடினமான சிக்கல் காரணமாக விமானத்தை சரி செய்யும் முயற்சி தோல்வியடைந்தது. இந்த போர் விமானம் ஒன்றின் விலை, 920 கோடி ரூபாய். எனவே, அதை பகுதியளவு பத்திரமாக கழற்றி, பிரிட்டன் எடுத்துச் செல்ல முடிவு செய்தது. அதற்கான குழு மற்றும் விமானம் நாளை திருவனந்தபுரம் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Santhakumar Srinivasalu
ஜூலை 04, 2025 21:02

எப்படியோ அதை நம் கடற்படை இயக்க முடியாமல் முடங்கி விட்டது


M Ramachandran
ஜூலை 04, 2025 13:50

அதை இங்கேயெ காயலாங்கடையில் விற்று விடலாமெ


Paramasivam
ஜூலை 04, 2025 20:56

நம்ப காயலாங்கடைக்காரர்கூட இதை வாங்க மாட்டாரோ என்னவோ


Santhakumar Srinivasalu
ஜூலை 04, 2025 21:03

சரியான முடிவு!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை