உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளை மேற்குவங்கத்திற்குள் நுழைய பிஎஸ்எப் அனுமதிக்கிறது; மம்தா பகீர் குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளை மேற்குவங்கத்திற்குள் நுழைய பிஎஸ்எப் அனுமதிக்கிறது; மம்தா பகீர் குற்றச்சாட்டு

கோல்கட்டா: பயங்கரவாதிகளை மேற்குவங்கத்திற்குள் நுழைய பி.எஸ்.எப்., அனுமதித்தது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மேற்கு வங்க தேச எல்லையை பாதுகாக்கும், பி. எஸ். எப்., படையினர் மாநிலத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகளை அனுமதிக்கின்றனர்.பயங்கரவாதிகள் பெண்களை சித்திரவதை செய்ய முயற்சி செய்கின்றனர். எல்லை எங்கள் கையில் இல்லை, எனவே திரிணமுல் காங்கிரஸ் அரசு ஊடுருவலை அனுமதிப்பதாக யாராவது குற்றம் சாட்டினால், அது பிஎஸ்எப்-ன் பொறுப்பு என்பதை நான் சுட்டிக்காட்டுவேன். இதற்கு திரிணமுல் காங்கிரஸை குறை கூற வேண்டாம்.நீங்கள் என்ன செய்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று மத்திய அரசிடம் பலமுறை கூறி வருகிறேன். பயங்கரவாதிகளுக்கு யாராவது உதவுவதை நான் கண்டால், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் மேற்கு வங்க மாநில அமைதியைக் சீர்குலைப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய சில வாரங்களுக்குப் பிறகு, மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankar
ஜன 03, 2025 06:05

இதுபோல தேசவிரோத மாநில அரசுகள் கலைக்கப்பட்டு அவை நிரந்தரமாக மைய அரசின் கீழ் வரவேண்டும்


Nandakumar Naidu.
ஜன 02, 2025 17:16

இவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இவர் ஒரு பயங்கரமான ராட்சஸி. தேச,சமூக மட்டும் ஹிந்து விரோதி. "ஜெய் ஸ்ரீ ராம்" என்றால் இவருக்கு பேய் பிடித்துக்கொள்ளும், அப்படி ஒரு தீவிர ஹிந்து விரோதி.


sankaranarayanan
ஜன 02, 2025 17:07

பயங்கரவாதிகளை மேற்குவங்கத்திற்குள் நுழைய பி.எஸ்.எப்., அனுமதித்தது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் கூறுவது சரி அல்ல - மமதை பிடித்த மம்தாவின் ஆட்சியதில்தான் பயங்கரவாதிகளை மேற்குவங்கத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடையாதாம் இது மம்தாவின் உத்திரவாம் அவர்களை வைத்தேதான் அங்கே அரசே நடக்கிறதாம்


சமீபத்திய செய்தி