உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலி தாண்டிய ஆட்டு மந்தை; வேண்டாம் என்கிறது பாகிஸ்தான்: எல்லையில் நீடிக்கும் தொல்லையால் பரிதவிக்கும் படை வீரர்கள்!

வேலி தாண்டிய ஆட்டு மந்தை; வேண்டாம் என்கிறது பாகிஸ்தான்: எல்லையில் நீடிக்கும் தொல்லையால் பரிதவிக்கும் படை வீரர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: வேலி தாண்டி, இந்திய எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லைப் பாதுகாப்பு படையினர் பரிதவிக்கின்றனர்.ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இரு நாட்டு எல்லையில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலி, ஒரு இடத்தில் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது. சந்து போல இருக்கும் அந்த இடைவெளியை பயன்படுத்தி, பாகிஸ்தான் எல்லைக்குள் மேய்ந்து கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட ஆடுகள், இந்திய எல்லைக்குள் வந்து விட்டன.ஜூலை 20ம் தேதி இந்த ஆடுகள் வந்து விட்டதை, அப்போதே எல்லை பாதுகாப்பு படையினர் கவனித்து, பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு போனில் தெரிவித்தனர். ஆனால், ஆடுகளை மீட்டுச்செல்வதற்கு அவர்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

அதிகாரி சொல்வது என்ன?

இது குறித்து பி.எஸ்.எப்., அதிகாரி கூறியதாவது: எல்லையை ஒட்டி ஆடு மேய்ப்பது பற்றி ஏற்கனவே பாகிஸ்தானின் துணை ராணுவ படையினரை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஆடுகள் வேலி சந்துக்குள் புகுந்து இந்தியா வந்து விட்டன. ஆடுகளை திரும்ப வாங்கவும் மறுக்கின்றனர்.

மீண்டும் ஒரு முறை!

இப்பிரச்னையை சமாளிக்க உதவும்படி தொண்டு நிறுவனத்தினரிடம் கேட்டோம். ஆனால் யாரும் முன் வரவில்லை. வேறு வழியின்றி உள்ளூர் ஆட்களை வைத்து நாங்களே ஆடு மேய்க்கிறோம். மீண்டும் ஒரு முறை பாகிஸ்தான் படையினரை கேட்போம். அப்போதும் அவர்கள் ஆடுகளை மீட்க வரவில்லை என்றால், சுங்கத்துறையினரிடம் ஒப்படைப்போம்.இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

mahimohi prabh
செப் 09, 2024 12:31

எல்லையோர காவல் படை உஷாராக இருக்கும் என்று நம்புவோம். ஆடுகளை நன்றாக பரிசோதிக்க வேண்டும். உளவு பார்க்கும் கருவிகள் இருக்கலாம்.


VIJAYKUMAR. P
செப் 08, 2024 15:30

நெருப்பு இல்லாமல் புகையாது.... பழ. விஜயகுமார்


David kulasekaran
செப் 08, 2024 15:28

வந்த வழியாகவே வேலியை பிறித்து பட்டபகலில் அனுப்பிவிடுங்கள். 300 ஆடுகள் மட்டுமா? இல்லை தீவிறவாதிகள் உள்வற இது வழியா? மறுமுறை வந்தால் நம் படை வீரர்களுக்கு விருந்தாக்கி போடுங்கள் அதில் எதாவது கடத்தல் இருந்ததாக கூறி...


N. Sundararajan
செப் 08, 2024 09:53

ஆடுகளை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், மீண்டும் கொரோனா போன்ற கிருமிகள் இருக்கலாம்.


Minimole P C
செப் 08, 2024 08:09

If these army are in dravidian rule control, this news wont be there. Goats before entering would have vanished.


SHIVAJNANA MURTHY
செப் 07, 2024 23:23

பிரியாணிதான்.. வேறு என்ன செய்வது..


DAMODARAN
செப் 07, 2024 23:04

ஆடு தான் என்றாலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எதாவது கிருமிகளை ஆடு மூலம் பரவ செய்ய முடியும் எதிரிகள் விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்


Rajaguru
செப் 07, 2024 22:48

சந்தேகமேயில்லை கறுப்பு ஆடுதான்?


Sivaprakasam Chinnayan
செப் 07, 2024 18:29

Must be careful on analysing each incidents


R S BALA
செப் 07, 2024 17:55

சந்தேகமே வேண்டாம் எதோ வில்லங்கம் கண்டிப்பா இருக்கு..


புதிய வீடியோ