மேலும் செய்திகள்
பாரதியார் பல்கலைக்கு புதிய பதிவாளர் நியமனம்
13-Aug-2025
நொய்டா:கிரேட்டர் நொய்டா தனியார் பல்கலையின் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டம் பூர்னியாவைச் சேர்ந்தவர் ஷிவம் டே, 24. கிரேட்டர் நொய்டா சாரதா பல்கலையில் பி.டெக்., படித்தார். சமீபத்தில் ஊருக்குச் சென்ற ஷிவம், குடும்பத்துடன் ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் சென்றார். அங்கிருந்து கடந்த, 2ம் தேதி கிரேட்டர் நொய்டா வந்தார். சுதந்திர தினத்தன்று விடுதி அறையில் ஷிவம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த நாலெட்ஜ் பார்க் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கு முன், ஷிவம் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'என் மரணத்துக்கு யாரும் பொறுப்பல்ல. 'நான் செலுத்தியுள்ள கல்விக் கட்டணத்தை பல்கலை நிர்வாகம் என் பெற்றோரிடம் திருப்பித் தர வேண்டும். இடைவிடாத படிப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நான் இந்த முடிவை எடுத்தேன்' என கூறி உள்ளார். ஷி வத்தின் தந்தை கார்த்திக் டே, “என் ஒரே மகன் ஷிவம் சமீபத்தில் வீட்டுக்கு வந்த போது கூட இயல்பாகத்தான் இருந்தான். அவனுக்கு வேறு எந்தக் கவலையும் இல்லை. தற்கொலை குறித்து தீர விசாரிக்க வேண்டும்,” என்றார். சாரதா பல்கலை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பல்க லை சார்பில் ஷிவம் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஷிவத்தின் விருப்பப்படி அவர் செலுத்தியிருந்த கல்விக் கட்டணம் பெற்றோரிடம் திருப்பித் தரப்படும். ஷிவம் குடும்பத்தி னருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஷிவம் டே, 2022ம் ஆண்டு பி.டெக்., கணினி அறிவியல் வகுப்பில் சேர்ந்தார். முதல் ஆண்டு படிப்பை முடித்த ஷிவம், இரண்டாம் ஆண்டு படிப்பை முடிக்க கடுமையாகப் போராடினார். ஆனால், மூன்றாம் ஆண்டுக்கு தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் பெறவில்லை. அவரது ஆசிரியர்கள் ஷிவத்தின் செயல்திறனை மேம்படுத்த பல வாய்ப்புகளை வழங்கினார். மேலும், குறைந்த கட்டணத்தில் இரண்டாம் ஆண்டு படிப்பை மீண்டும் படிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
13-Aug-2025