உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் கனமழையால் இடிந்தது கட்டடம்; பல உயிர்களை காப்பற்றிய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு

பஞ்சாபில் கனமழையால் இடிந்தது கட்டடம்; பல உயிர்களை காப்பற்றிய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் கனமழையால் பழைய கட்டடம் இடிந்து விழுந்தது. சில வினாடிகளுக்கு முன், பலரை ராணுவ வீரர்கள் காப்பாற்றி தப்பிக்க வைத்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.பஞ்சாபில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பஞ்சாபில் உள்ள மாதோபூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. அப்பகுதியிலிருந்த பழைய கட்டடத்தின் மேல் ஹெலிகாப்டரை சாதுர்யமாக இறக்கி உள்ளே சிக்கி இருந்தவர்களை ராணுவ வீரர்கள் மீட்டனர். அதன் பிறகு சில வினாடிகளில் கட்டடம் இடிந்தது. பல உயிர்களை காப்பற்றிய ராணுவ வீரர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆபத்தான நிலையில் இடிந்து விழும் சூழலில் பழைய கட்டடம் இருந்த போதிலும், ராணுவ விமானிகள் ஹெலிகாப்டரில் சென்று பல உயிர்களை காப்பாற்றினர். இந்த சாதனை துணிச்சலை நிரூபித்துள்ளது. தங்கள் சொந்த உயிரைப் பணயம் வைத்து, சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு நபரையும் பாதுகாப்பாக ராணுவ வீரர்கள் மீட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கமென்ட் செய்யுங்கள்!

பல உயிர்களை காப்பற்றிய ராணுவ வீரர்களின் துணிச்சலான செயலுக்கு வாழ்த்துக்களையும், உங்களது கருத்துகளையும் கமென்ட் செய்யுங்கள் மக்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Thirumal Kumaresan
ஆக 28, 2025 16:38

நாம் பலவழிகளில் பாதுகாக்கபடுகிறோம் நமது ராணுவ வீரர்கலால். அவர்களுக்கு நன்றியோடு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்,நன்றி jaihind


லிங்கம்,கோவை
ஆக 28, 2025 05:22

இந்திய நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் ராணுவ வீரர்களுக்கும் ராணுவத்திற்கும் மிகவும் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் வளர்ந்துள்ளது. இதை பஞ்சாப் மக்கள் புரிந்து கொண்டு மோடியை மோடி அரசாங்கத்தை ஆதரவளிக்க வேண்டும் ஊழல் புரிந்த ஆம் ஆத்மி கட்சியையும் காங்கிரஸையும் புறக்கணித்து மோடி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இப்பொழுது ராணுவ வீரர்கள் தன் உயிரை துச்சமாக மதித்து மக்களை காப்பாற்றுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. ராணுவ வீரர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.


அப்பாவி
ஆக 27, 2025 19:37

நேரு தான் காரணம். அவுருதான் கட்டினாரு. முடிஞ்சுது பிரச்சனை.


Artist
ஆக 27, 2025 11:50

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தானே இந்த மாதிரி வேலை செய்ய வேண்டும் ?


Rameshmoorthy
ஆக 27, 2025 10:53

Our real hero's and Jai hind


BALAJI
ஆக 27, 2025 10:22

JAIHIND


சமீபத்திய செய்தி